Header Ads



முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள, நிலைமை குறித்து ரணில் கவலை

ஆளும் தரப்பு பாராளுமன்றக்குழுக்கூட்டத்தின் போது முஸ்லிம் சமூகம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை அரச தரப்பு பாராளுமன்றக் குழுக்கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற போது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த கோரிக்கைகள் கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.  

இந்த வாரத்தில் இடம்பெறவிருக்கும் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேணையைத் தோற்கடிப்பதில் அனைத்து உறுப்பினர்களும் இணைந்து செயற்பட வேண்டியதன் அவசியம் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்த்தரப்பில் இருக்கும் கட்சிகளிடமும், தமிழ் தேசியக்கூட்டமைப்பிடமும் இதற்கு ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளது.  

இதன்போது முஸ்லிம் தரப்பு எம். பி.க்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். 30நாட்கள் கால அவகாசம் கொடுத்தும் அரசு முஸ்லிம் சமூகம் விடயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதை இவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தமது பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு பிரதமர் நேரம் ஒதுக்கித்தர வேண்டும் எனவும் இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. முஸ்லிம் தரப்பினரின் கருத்துக்களை செவிமடுத்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். இது விடயத்தில் உரிய நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதாகவும், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அவர்களது வாழ்க்கையில் இயல்புநிலையை தோற்றுவிக்கவும் அவசியமான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் பிரதமர் உறுதியளித்திருக்கின்றார்.  

அத்துடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தாமதமின்றிப் பேச்சுவார்ததை நடத்தவும் பிரதமர் இணங்கியுள்ளார். இன்றைய தினத்தில் பேச்சுக்கள் இடம்பெறலாமெனத் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை நாளை 11ஆம் திகதி பதவி துறந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் கூடி தமது அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து ஆராயவிருக்கின்றனர்.  

சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி தலைமையில் நாளை மாலை 3மணிக்கு நடைபெறவிருக்கும் இக்கூட்டத்தில் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்னள் அடுத்து எடுக்கப்பட வேண்டிய விடயங்கள், அவர்களது அடுத்த கட்ட நகர்வு என்பன இங்கு தீர்மானிக்கப்பட்டதன் பின்னர் நாளை மறுதினம் முக்கிய அறிக்கை வெளியிடப்படவிருப்பதாக முஸ்லிம் தரப்பு வட்டாரம் தெரிவித்துள்ளது.

எம்.ஏ.எம். நிலாம்

2 comments:

  1. ​இது பிரதமரின் கையாலாகாத தன்மையைக் காட்டுகிறது. சட்டத்தை அமல்நடாத்தவும் முடியவில்லை.சட்டத்துக்கு எதிராகச் செயல்படும் காவிகளைத் தண்டிக்கவும் வக்கில்லை. பதவி பிரதமர்.பிணைமுறியில் களவாடிய பணத்தைத் தின்று சாவது இதைவிடமேல்.

    ReplyDelete
  2. Why because of no confidence motion you want us?
    Aney palayang. When we need you to control the violence you were not their.

    ReplyDelete

Powered by Blogger.