Header Ads



தேசிய தௌஹீத் ஜமாத் பொலிஸாரின் ஒத்துழைப்புடனே, பல செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக இன்று சாட்சியமளிக்கையில் முன்னாள் மேல்மாகாண ஆளுனர் அசாத் சாலி தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் மொஹமட் சஹ்ரான், முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹிற்கு தேர்தல் நேரத்தில் உதவிகள் புரிந்தார் என சாட்சியம் வழங்கியுள்மை அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவர் குறிப்பிடுகையில்..

சஹ்ரான் ஆயுதக்குழுவாக செயற்பட்டு கிழக்கில் மக்களை அச்சுறுத்தி வந்தார். அதனால் அச்சமடைந்த மக்கள், அவருக்கு கட்டுப்பட்டு, அவரது பேச்சை கேட்டனர்.

2015 நாடாளுமன்ற தேர்தலின்போது, தம்முடன் உடன்படிக்கை மேற்கொள்ளும் கட்சிகளிற்கே உதவி செய்வதாக சஹ்ரான் தெரிவித்திருந்தார்.

இதனடிப்படையில் ஹிஸ்புல்லாஹ், சஹ்ரானுடனும் உடன்படிக்கை செய்தார்.

ஹிஸ்புல்லாஹ் மட்டுமல்ல மேலும் பல முஸ்லிம் அரசியல் தலைவர்களும் உடன்படிக்கை செய்து கொண்டனர்.

தமது தேர்தல் பிரசாரத்தில் பட்டாசு கொளுத்தக்கூடாது, பாடல் ஒலிபரப்பக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் அந்த உடன்படிக்கையில் இருந்தன.

அப்துல் ராசிக் கைது செய்யப்படாமல் வெளியில் நடமாடுவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது. அவர் ஐ.எஸ் அமைப்பின் கொள்கையை பின்பற்றுபவர்.

இது குறித்து ஜனாதிபதியிடம் மூன்று தடவைகள் குறிப்பிட்டுள்ளேன். ஜனாதிபதி குற்றப்புலனாய்வு பிரிவினருடன் இது குறித்து கலந்துரையாடினார் என தெரிவித்துள்ளார்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பை எடுத்துக்கொண்டால், 2005 ஆம் ஆண்டிலிருந்து பொலிஸாரின் ஒத்துழைப்புக்களுடன்தான் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளார்கள்.

இந்த இரண்டு தரப்பும் ஒன்றாகவேதான் வேலை செய்துள்ளன. இதனை நான் உறுதியாக கூறிக்கொள்கிறேன்.

இதனால், முஸ்லிம் ஒருவருக்கு முறைப்பாடளிக்கக்கூட முடியாத நிலைமை காணப்பட்டது.

சிலர் பொலிஸ் நிலையத்தில் வைத்து விரட்டியடிக்கப்பட்டார்கள். இதற்கெதிராக நான் பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றில் ஊடாக தெரியப்படுத்தியுமிருந்தேன்.

இதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளன.” என மேலும் கூறினார்.

3 comments:

  1. உங்களின் தெளிவற்ற, தந்திரமான வாக்குமூலம் உங்களின் அரசியல் காய் நகர்த்தலை நன்கு உணர்த்துகிறது. யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்ஜம்...(ஒவ்வொரு முஸ்லீம் அரசியல்வாதிகளும் உங்களுடய வார்த்தைகளை, நேர்கானல்களை பக்குவமாகவும் அறிவுபூர்வமாகவும் வெளியிடுங்கள் உங்களின் பிழையான பேட்டிகளாலும் சொற்பிரயோகங்களினாலும் பாதிக்கப் படுவது எம்சமூகம் என்பதை மனதில் வைத்துச் செயற்படுன்ஹ்கள்.)

    ReplyDelete
  2. ஒரு பயங்கரவாத இயக்கதை காடி கொடுத்து ஒற்று மொத்த முஸ்லிம்களையும் பாதுகாப்பது காலதின் தேவை அதனால நீங்கள நேரடியாக வழங்கிய தகவலால் சிங்கள மக்களுக்கு ஓரு தெளிவாக விளங்கி கொண்டார்கள் ஒற்று மொத்த முஸ்லிம் இல்லை ஒரு சில குழு என்பது உங்கள் பதிளினால் விளங்கி கொண்டார்கள்

    ReplyDelete

Powered by Blogger.