June 20, 2019

மீண்டும் அமைச்சு பொறுப்பை, ஏற்றது ஏன்..? விளக்கமளிக்கிறார் ஹலீம்

அர­சாங்­கத்­திடம் நாங்கள் முன்­வைத்த முஸ்­லிம்­களின் சம­கால பிரச்­சி­னைகள் தொடர்­பாக ஜனா­தி­ப­தி­யு­டனும், பிர­த­ம­ரி­டமும் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறோம்.  தற்­போது சுமு­க­நிலை ஏற்­பட்டு வரு­கி­றது. முஸ்லிம் சமூகம் தொடர்­பான ஹஜ் சட்­ட­மூலம், அர­புக்­கல்­லூ­ரி­க­ளுக்­கான சட்­ட­மூலம், வக்பு சட்­டத்தில் திருத்­தங்கள் என்­பன நிலு­வை­யி­லுள்­ளன. இவற்றை நிறைவு செய்­வதைக் கருத்­திற்­கொண்டே மீண்டும் அமைச்சுப் பொறுப்­பினை ஏற்­றுக்­கொண்டேன் என அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.எச்.ஏ.ஹலீம் நேற்று தனது முன்­னைய அமைச்சர் பத­வி­யினை மீண்டும் பொறுப்­பேற்றுக் கொண்­டதன் பின்பு அது தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யிலே இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

முஸ்லிம் அமைச்­சர்கள் நாம் கூட்­டா­கவே பத­வி­களை இரா­ஜி­னாமா செய்து கொண்டோம். வேறு­பட்ட கட்­சி­களின் உறுப்­பி­னர்கள் நாம். தலை­மைத்­து­வத்­திற்கு நாம் கட்­டுப்­பட வேண்­டி­ய­வர்­க­ளாக உள்ளோம். அத்­தோடு நானும், கபீர்­ஹ­சிமும் சிங்­க­ள­வர்­களைப் பெரும்­பான்­மை­யா­கக்­கொண்ட தொகு­தி­களைப் பிர­தி­நி­தித்­துவப் படுத்­து­ப­வர்கள். எமக்கு வாக்­க­ளித்த மக்­களும் நாம் மீண்டும் அமைச்சுப் பத­வி­களைப் பொறுப்­பேற்றுக் கொள்­ள­வேண்­டு­மென அழுத்­தங்­களைப் பிர­யோ­கித்­தார்கள். முஸ்­லிம்­க­ளுக்கு பாது­காப்பு வழங்­கப்­பட வேண்டும். கைது­செய்­யப்­பட்டு தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருக்கும் அப்­பாவி முஸ்­லிம்கள் விடு­தலை செய்­யப்­பட வேண்டும். முஸ்­லிம்­க­ளுக்­கெ­தி­ரான குற்­றச்­சாட்­டுகள் தாம­த­மின்றி விசா­ரிக்­கப்­பட்டு தீர்வு வழங்­க­வேண்டும் என்­பதில் நாம் உறு­தி­யாக இருக்­கிறோம்.

முஸ்லிம் சமய விவ­கார அமைச்­சுக்கு முஸ்லிம் ஒருவர் அமைச்­ச­ராக பதவி வகிக்காது விட்டால் பல சிக்கல்கள் ஏற்படுத்தப்படும். முஸ்லிம்களின் கடமைகளில் அசௌகரியங்கள் உருவாகும் எனக்கருதியே மீண்டும் அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்றுக் கொண்டேன் என்றார்.

4 கருத்துரைகள்:

கல்முனையில்,இனவாதிகல் அவசரகாலச் சட்டம் நாட்டில் உள்ள இச்சந்தர்ப்பத்தில் சட்டத்தை தமது கையில் எடுத்து கடந்த 4 தினங்களாக பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுவதை உங்கல் தலைவரும்,அரசும்,ஜனாதிபதியும் வேடிக்கை பார்ப்பதை முளு உலகமும் அறியும்.நீங்கள் அமைச்சு பதவியை மீண்டும் ஏற்றுல்லீர்கல் இப்போது கல்முனை அராஜகத்தை பற்றி மேல் மட்டத்துடன் சொல்லி ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை எடுக்க முடியவில்லை

நம்பிட்டொம்! அப்போ இதுபற்றி பதவி விலக முதல் தெரியாது போனதா? உங்கள் 10 கோரிக்கைகள் இப்போ கடல்லயா? தலைவர்களாம்!!!

சும்மா போ மச்சான் எல்லாருக்கும் கொண்டை கட்டாமல்.

What a shamefull thing to do. WAS IT NOT REAL ACTION/DEED OF TO "DECEIVE AND HOODWINKING" THE SRI LANKAN MUSLIM CPOMMUNITY. " The Muslim Voice" has been telling all about the "deception and hoodwinking" of these Muslim "munaaffikk" politicians since June 2014 run-up to the Aluthgama and Beruwela incidences. The Muslims have now got to "RALLY AROUND THE MUSLIM VOICE" and other Muslim Forces working to bring about a change in the Muslim political and Ulema leadership.
Did the Gold smuggling incidet that was detected a few months ago make the "BETRAYAL" made towards the Muslims and letting them down? IT IS TIME UP THAT A NEW POLITICAL FORCE THAT WILL BE HONEST AND SINCERE THAT WILL PRODUCE 'CLEAN' AND DILIGENT MUSLIM POLITICIANS TO STAND UP AND DEFEND THE MUSLIM COMMUNITY POLITICALLY AND OTHERWISE, ESPECIALLY FROM AMONG THE YOUTH/YOUNGER GENERATION HAS TO EMERGE FROM WITHIN THE SRI LANKA MUSLIM COMMUNITY TO FACE ANY NEW ELECTIONS IN THE COMING FUTURE, INSHA ALLAH.
Noor Nizam. Peace and Political Activist, Political Communication Researcher, SLFP Stalwart and Convener - The Muslim Voice.

Post a comment