Header Ads



முஸ்லிம் விரோத போராட்டங்கள், முன் எடுக்கப்பட்டு வருகின்றன - கிரியெல்ல

இன்று முஸ்லிம்களுக்கு  விரோதமாக உண்ணாவிரதப் போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்த தர்மத்தின் படி உண்ணாமல் இருந்து தன்னைத்தானே மாய்த்துக் கொள்வது அல்லது தற்கொலை செய்வது  பாவச் செயலாகும் என.அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்தார்.

இலங்கையில் பௌத்த மதம் அழிவடைந்து வருவதாகப் போலிக் கருத்துக்களைச் சிலர் பரப்பிவருகின்றனர். அது நடக்கப் போவதில்லை இன்று முஸ்லிம்களுக்கு  விரோதமாக  உண்ணாவிரதப் போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றன. 

பௌத்த தர்மத்தின் படி உண்ணாமல் இருந்து தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது அல்லது தற்கொலை செய்வது  பாவச் செயலாகும் எனப் பாராளுமன்ற அவைத் தலைவரும் அரச முதலீட்டு மலைநாட்டு மரபுரிமைகள் மற்றும் கண்டி அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்தார்.

நேற்று புசல்லாலையில் பௌத்த விகாரை ஒன்றில் இடம் பெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

பௌத்தர்கள் என்ற அடிப்படையில் விகாரைகளைப் பாதுகாப்பது எமது கடமையாகும். இலங்கையை 400 வருடங்களுக்கு மேல் அன்னியர்கள் ஆட்சி புரிந்தனர். அவ்வாறு ஐரோப்பியர்கள் ஆண்டுவந்த 400 வருட காலத்தில் அழிக்கப்பட முடியாத பௌத்த சமயம் தற்போது பௌத்த ஆட்சியில் எங்கனம் அழிவை நோக்கிச் செல்ல முடியும். ஆனால் சிலர் பௌத்தம் அழியப் போவதாகவும் அல்லது அழிந்து விடும் என்றும் ஒரு மாயையை ஏற்படுத்தி வருவது கவலை தரும் விடயமாகும்.

ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், ஆங்கிலேயர் என மூன்று பிரிவினர் இலங்கையை அவ்வப்போது ஆட்சி புரிந்தனர். அக்காலத்தில் கூட பௌத்த சமயம் அழிவை நோக்கிச் செல்லவில்லை. அப்படியாயின் தற்போது அது எப்படி நடக்க முடியும்.

சிலருக்கு தமது வாக்கு வங்கிகளை உறுதிப் படுத்திக் கொள்ளப் பௌத்தம் அழிகிறது என்ற தப்பான கருத்தை முன்வைக்க வேண்டியுள்ளது. அவர்களுக்கு அது ஒரு பிரசார உத்தியாக உள்ளது. இலங்கையில் ஆட்சிபீடமேறிய சகல அரசுகளும் பௌத்த மதத்தைப் பாதுகாத்து வந்துள்ளன. 

இன்று முஸ்லிம் விரோத உண்ணாவிரதப் போராட்டங்கள் முன் எடுக்கப்பட்டு வருகின்றன. பௌத்த தர்மத்தின் படி உண்ணாமல் இருந்து தன்னைத்தானே மாய்த்துக்கொள்வது அல்லது தற்கொலை செய்வது  பாவச் செயலாகும் அரச சட்டத்தின் படியும் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முடியாது. அது குற்றச் செயலாகும் என்றார்.

1 comment:

  1. தலைவர் லக்ஷ்மன் கிரியெல்ல அவர்களது கூற்று நிதர்சனமானது. அது வரலாற்றாளர்களுக்கு நன்கு புலப்படக்கூடிய உண்மையாகும். 1586 லிருந்து 1947 வரை சுமார் 361 வருட காலங்கள் இலங்கை அன்னியரது ஏகபோக ஆட்சியிலிருந்தது. யாரையும் வீணுக்கு அநேகமாக அவர்கள் மதமாற்ற முயற்சிக்கவி;லலை. இன்னும் சொல்லப்போனால் சிறப்பாக பௌத்தம் அந்தக் கால சூழ்நிலைக்கேற்ப சீர்பெற்றிருந்தமையை குறிப்பிடலாம். அக்கால பௌத்த துறவிகள் மக்களை நல்வழிப்படுத்தவே பெரிதும் முயற்சி செய்து இதில் பெரு வெற்றியும் கண்டனர். இதன்காரணமாக மற்ற சமயத்தினர் ஒடுக்கப்படவில்லை. மாறாக பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்தன. சிங்கள கிராமங்களுக்கிடையே முஸ்லிம் கிராமங்கள் அமைந்து காணப்பட்டன. அக்கால வர்த்தக முஸ்லிம்கள் உயர்குடி சிங்களப் பெண்களை மணந்து குடும்ப வாழ்க்கை நடாத்துவதற்கு சிங்கள மக்களும் அரசர்களும் பிரதானிகளும் பக்கதுணையாக இருந்தனர். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் மூன்று இனங்களுக்கும் மத்தியில் காணப்பட்ட தவறான புரிந்துணர்வுகள் காரணமாக உட்பகைமை ஏற்பட்டு நாடு சின்னாபின்னமாக மாறியுள்ள அவலக் காட்சிகளை காணக்;கூடியதாக இருக்கின்றது. உலகின் 7-8 பௌத்த பெரும்பான்மை நாடுகளுல் இலங்கையில் மாத்திரம்தான் பௌத்தம் மிக உயர்நிலையில் உள்ளது. மதம் என்பது பின்பற்றுவதற்கு இலகுவானதாக இருத்தல்வேண்டும். பௌத்தம் அப்படிப்பட்ட ஒன்றுதான் ஆனால் நமது தேரர்கள் தமது இலாபம் தரும் முயற்சிகள் காரணமாக பௌத்தத்தை மிகக் கஷ்டமான மதமாக ஆக்குகின்றனர். இலங்கை அரசியலில் மாத்திரம்தான் மதத்தின் செல்வாக்கு அதியுச்சநிலையில் இருக்கின்றது. உலகின் எந்த நாடுகளுக்கு மத்தியிலும் காணக்கிடைக்காத அரசியல் இயல்புகள் இலங்கையில் மாத்திரமே காணப்படுகின்றன. உலகின் எந்த நாடும் மதகுருமாரின் கட்டுப்பாட்டில் இல்லை. எத்தனையோ முஸ்லிம் தலைவர்கள் தமது நாட்டில் கலவரத்திற்கு துணையாக இருந்தார்கள் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தில் இலட்சக்கணக்கான இஸ்லாமிய மதகுருமாரின் முகவரிகளையே இல்லாமல் ஆக்கிய பல சம்பவங்களை நாங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது. ஓவ்வொருவரும் அவரவர்களுக்குரிய தொழில்களைப்பார்த்தால் நாடு சுபிட்சமடையும். அரசியலுக்கும் மதத்திற்கும் எந்தத் தொடர்பும் இருக்கலாகாது. நாடா மதமா என்பதனை முடிவு செய்யவேண்டியது அரசியலாளர்களே!

    ReplyDelete

Powered by Blogger.