Header Ads



பள்ளிவாசல் சோதனையையும், முஸ்லிம்களை கைது செய்வதையும் நிறுத்தக்கூடாது - இனவாதம் கக்கும் மகிந்த

தனது தலைமையிலான அரசாங்கத்தில், இந்த நாட்டில் எந்தவொரு பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

முஸ்லிம் சமூகத்துக்குள் இருந்து எழுகின்ற பயங்கரவாதத்தை இல்லாமல் செய்ய வேண்டுமாக இருந்தால், முஸ்லிம் பள்ளிவாயல்கள், முஸ்லிம் வீடுகள், வியாபார நிலையங்கள் சோதனை இடப்பட வேண்டும். கட்டாயமாக முஸ்லிம்களை கைது செய்ய வேண்டி வரும்.

தற்பொழுது நாட்டில் அடிப்படைவாதம் குறித்து பேசப்படுவதில்லை. சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது. ஆயுதங்கள் தேடப்படுவதும் இல்லை. கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை. தமது அரசியல் நடவடிக்கைக்காக இந்த நாட்டிலுள்ள முஸ்லிம் மக்களை ஐக்கிய தேசியக் கட்சி பயன்படுத்திக் கொள்கின்றது.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடிப்படைவாத முஸ்லிம்களினதும், நடுநிலை முஸ்லிம்களினதும் வாக்குகள் அவசியமாகியுள்ளதாகவும், பயங்கரவாதத்தை இந்த நாட்டிலுள்ள ஏனைய மக்கள் ஒருபோதும் விரும்புவதில்லையெனவும் மஹிந்த ராஜபக்ஸ மேலும் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலின் பின்கட்ட நடவடிக்கைகள் எனும் தலைப்பில் கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க் கட்சித் தலைவரின் இல்லத்தில் வைத்து இன்று (11) விசேட உரையொன்றை மஹிந்த ராஜபக்ஸ நிகழ்த்தியுள்ளார். இதன்போதே இவ்வாறு கூறியுள்ளார்

6 comments:

  1. இம்முறை கோட்டா ஜனாதிபதி வேட்பாளராக களம் இறங்கினால் கோட்டா தோல்வியடைய வேண்டிய தேவை மஹிந்தவிற்கு தான் அதிகம். காரணம் நாமலின் அரசியல் எதிர்கலாம், மற்றும் 2025 ல் நாமலை ஜனாதிபதி ஆக்க வேண்டும் என்கிற கனவு.ஆகவே இப்படியெல்லாம் இனவாதம் கதைத்தால் தான் கோட்டாவை கண்டு முஸ்லிம்கள் அஞ்சி புறக்கணிப்பார்கள் எண்டு ரணிலும் மஹிந்தவும் போட்ட மாஸ்டர் பிளானின் ஒரு அங்கமே இது. எது எப்படியாகயிருந்தாலும் கோட்டாவின் தோல்வி உறுதியாகிவிடும்

    ReplyDelete
  2. கடும்போக்கு இனவாதிகளின் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்குத் துணை போவதும் அந்த வீணாப்போன அரசியலுக்கு ஆதரவு வழங்குவதும் இந்த நாட்டு மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் அழிவையும், மீளவேமுடியாத இழிவையும் தான் கொண்டுவரும் என்பதை இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் மிகக் கவனமாகவும் நுணுக்கமாகவும்யோசித்து விளங்கிக்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. He is the main stream behind all these insurgencies, how can he place innocents at his stage?

    ReplyDelete
  4. அளுத்கம மற்றும் திகன இல் நம்மள அடிச்ச மனோ நிலையில இருந்து இவன் இன்னும் மாறுனமாரித் தெரியல.......

    ReplyDelete
  5. he and his team is forming a racism always in the country. till he and his family members alive or active in politics can not expect peace in country

    ReplyDelete
  6. ரணில் மஹிந்தவுக்கு இனி முஸ்லீம் ஓட்டு இல்லை

    ReplyDelete

Powered by Blogger.