Header Ads



எதிர்காலத்தில் நாம் கோத்தபாயவுடன் இணைந்து, செயல்படுவது குறித்து ஆச்சரியப்பட வேண்டியதில்லை - ஹக்கீம்

கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்க முடியாது என்று கூறவில்லை, அவரது கொள்கைகள் என்னவென்று பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

எமது மக்கள் எதிர்பார்ப்பது ஒரு சிறந்த பலமான தலைவரை அதேபோன்று இந்நாட்டுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தலைவரையே.

இந்த பலம் கோத்தபாய ராஜபக்சவிடம் இருக்கிறது. ஆனால் முஸ்லிம் மக்களிடத்தில் அவர் குறித்து விமர்சனம் இருக்கிறது.

அந்த விமர்சனங்களை இல்லாமல் செய்வது அவரது பொறுப்பாகும், அந்த விமர்சனம் தொடர்ந்தும் மக்கள் மத்தியில் இருக்கும் எனவும் கருதவும் முடியாது.

எதிர்காலத்தில் நாம் கோத்தபாய ராஜபக்சவுடன் இணைந்து செயல்படுவது குறித்து ஒன்றும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. இந்த நாடு பௌத்த நாடு அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் ஏனைய மதங்களையும் கௌரவிக்க வேண்டும். அதே போன்று அவர்களின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. எவன் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கு பிரச்சினை தான். ஆனால் நீங்கள் ஒற்றுமையாக செயற்பட்டால் எவன் வந்தாலும் எமக்கு பயமில்லை. இன்று முஸ்லிம்களுக்கு தேவை கோட்டா, ரணிலின் ஆட்சி அல்ல உங்களின் பலமான கூட்டமைப்பும், அதன் வெற்றியும் தான்

    ReplyDelete
  2. கோத்தா வரவேண்டும்.அபோது இபோ துல்லுகின்ர மீதமான புலிகளுக்கு நல்ல பாடம் கற்பிக்க வேண்டும்

    ReplyDelete
  3. ராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன எங்களுக்குத்தேவை எமதுமக்களின் பாதுகாப்பும் சமய கலாச்சார அரசியல் சுதந்திரமும், இருப்பினும் வாக்குறுதி கொடுப்பவர், கொடுத்த வாக்கினை காப்பாற்றிய சரித்திரத்தினைக்கொண்டவராக இருக்கவேண்டும் என்பதுடன் முஸ்லிம்களைப்பற்றி அடிப்படையிலேயே நல்லெண்ணம் கொண்டவராக இருக்கவேண்டும்

    ReplyDelete
  4. This is may be Mr. Rauf personal opinion but cannot be represent the entire SL Muslim. You cannot sell entire Mulim votae bank to Gota. People don't forget your past political record!

    ReplyDelete
  5. NGK you are 100% correct

    ReplyDelete
  6. இந்த Rizard இந்த கொமெடி தாங்கவில்லை .

    ReplyDelete
  7. பலவான்களின் பக்கம் சார்ந்திருப்பது தான் பாதுகாப்பு. கோலய்களுடன் இருப்பதய் விட hasbunallahu wanihmal wakeel

    ReplyDelete

Powered by Blogger.