Header Ads



தற்கொலை தாக்குதல் நடந்த கட்டுவப்பிட்டிய, தேவாலயம் சென்று ஞானசாரர் செய்த சபதம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட அடிப்படைவாதிகள் புகட்டிச் சென்ற பாடத்தை பொறுப்பு கூற வேண்டியவர்களும், அதிகாரத்தில் உள்ளவர்களும் இன்னும் விளங்கிக் கொள்ளவில்லை. இவர்கள் தினமும் நாட்டில் நடக்கும் வீதி விபத்தைப் போன்று தான் தற்கொலை குண்டு தாக்குதல்களுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர் என்று பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

பயங்கரவாத தாக்குதலுக்கு இலக்கான நீர்கொழும்பு கட்டுவப்பிட்டிய தேவாலயத்திற்கு இன்று -23-விஜயம் செய்திருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மீண்டும் இந்த நாட்டில் பொது மக்களை இலக்கு வைத்து இது போன்றதொரு  மிலேச்சத்தனமான அடிப்படைவாத தாக்குதல்கள் இடம்பெற இடமளிக்கப்பட மாட்டாது என்பதை பொறுப்புடன் சபதமாகத் தெரிவிக்கின்றேன். உயிரழந்த அப்பாவி உயிர்கள் முக்தியடைவதற்கு இந்த தாக்குதல்களை மேற்கொண்ட அடிப்படைவாதிகள் முற்றாக இல்லாதொழிக்கப்பட வேண்டும். 

இவ்வாறான அடிப்படைவாதிகள் நிச்சயமாக இல்லாதொழிக்கப்படுவார்கள் என்று உறுதியளிப்பதோடு, அதற்கு அனைத்து மக்களதும் ஒத்துழைப்பையும் கோருகின்றோம். இன, மத பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து இவர்களை நாட்டிலிருந்து துடைத்தெறிய வேண்டும் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

1 comment:

  1. இலங்கை முழுக்க என்ன உலகலாவியரீதியில் நான் பிரபல்லியம் அடையவேண்டமென்ற மனநோயால் பாதிக்கப்பட்டு மூளைச்சலவு செய்யப்பட கொடூரக்கொலைகாரன் சஹ்ரானுக்கும் உனக்குமிடையில் என்ன வித்தியாசம் நீ சில அப்பாவி பௌத்த வாலிபர்களை மூளைச்சலவு செய்து எத்தனை மனிதர்களை கொண்டாய் பின்பு திகன,கொடராம்புல்லை போன்ற இடங்களில் நிகழ்ந்த கொலைகளுக்கும் ஸஹ்ரான் செய்த கொலைகளுக்கும் என்ன வித்தியாசம் அனைவரும் கடவுளால் படைக்கப்பட்டவர்கள்தானே!
    மிகவும் உன்சிந்தனைக்கு உடன்படாத மக்களை மற்றமனிதர்களின் உள்ளங்களை புன்படுத்துகின்றாய மிகவிரைவில் கடவுளின் தண்டனை உனக்கு இவ்வுலகிலே இருக்கின்று அப்போது தற்போதய உனது இந்த தீய காரியங்கள் நினைவு கொள்வாய் பொறுத்திருந்து பார்ப்போம்

    நீ யார் என்ற உண்மை அறியாமல் உன்னை படைத்த கடவுளாகி ஒருவனை நீ பாசாங்கு செயகின்றாய் கடவுள் மிகவும் நிதானமானவன்

    ஒவ்வொரு மனிதனும் செய்யும் தவறுகளை உணர்ந்து அவனிடம் மன்னிப்ங கேட்க சந்தர்ம் வளங்கியுள்ளான் அதை நீ புரிந்துகொள்!

    ReplyDelete

Powered by Blogger.