Header Ads



பொலன்னறுவையில் தொழாதவர்களுக்கு என, மையவாடி பிரிக்கப்பட்டு தனிப்பகுதி ஒதுக்கீடு


பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு முஸ்லிம் கிராமமான கட்டுவன்விலவில் (கட்டுவன்புல்) அமைந்திருக்கும் முஸ்லிம் அடக்கத்தலம் (மையவாடி) இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ந்துவிட்டேன்.

அங்கே "தொழுகையாளிகளை நல்லடக்கம் செய்யப்படும் இடம் " என்று ஒரு பகுதியும் "தொழாதவர்கள் அடக்கப்படும் இடம் என்று ஒருபகுதியும் பெயர்ப்பலகைகள் இடப்பட்டு பிரித்து வைக்கப்பட்டிருக்கிறது.

முஸ்லிம்களின் உலக வாழ்வின் நம்பிக்கையில் மரணத்துக்குப் பின் மனிதர்கள் சென்றடையும் இரண்டு இடங்கள் இருக்கின்றன. அவை சொர்க்கம்- நரகம் என்றழைக்கப்படுகின்றன. சொர்க்கம் முடிவிலா மகிழ்ச்சி தருவது. நரகம் சிலருக்கு முடிவிலா துன்பம் தருகிற அதே நேரம் சிலரை சிலகாலம் தண்டிக்கும் பின்னர் அவர்கள் சுவர்க்கம் ஏகுவர்.சுவர்க்கத்துக்கும் நரகத்துக்கும் இடையில் இன்பமும் துன்பமுமின்றி "அல்லல்படுவோரும்" உண்டு, அவர்கள் தாமதித்து விடுதலையடைவர்.

மரணித்த முஸ்லிம் மனிதர்களை அவர்கள் வாழ்ந்த பூமியிலேயே புதைக்கும் போது பிரித்து வைக்க எவர் சொன்னார் உங்களுக்கு? பள்ளித் தலைவர்கள் தமது அதிகாரத்தை நிறுவ மையித்துகளா கிடைத்தன முட்டாள்களே? இது ஒருவித தீவிரவாதமன்றி வேறென்ன?

நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் புறத்தே நின்றும் உள்ளது என்று சொல்லித் தந்தீர்கள். அங்கே தொழுதவரா தொழாதவரா என்று சொல்லவில்லை.

நீர் விடாயில் தவித்த நாய்க்கு தனது மேலாடையை கிணற்றுக்குள் விட்டு அதனை நனைத்தெடுத்து நாயின் வாய்க்குள் பிழிந்து தாகம் தீர்த்த பெண்ணுக்கு சுவர்க்கம் பரிசளிக்கப்பட்டதாய் சொன்னீர்கள்.இந்தப் பெண் தொழுதாரா இல்லையா என்று சொல்லவில்லை.

ஒரு மனிதரின் இரகசியத்தை அல்லாஹ் அன்றி வேறு எவரும் அறியார் என்றீர்கள், சொர்க்கத்தையோ நரகத்தையோ வழங்குவது அல்லாஹ் அன்றி வேறெவருமல்ல என்றீர்கள், இப்போது என்ன மையித்துப் பிட்டியில் மசிரு புடுங்குகிறீர்கள்?

300 வருடமாக ஒரு குகையில் ஈமானை காத்து படுத்திருந்த நாய் ஒன்று சுவர்க்கம் புகுந்ததாய் சொன்னீர்களே அந்த நாய் தொழுததால்தான் சுவர்க்கம் போனதா? இல்லை ஆறறிவற்ற மிருகங்கள் கேள்விகளற்று சுவர்க்கம் போகின்றனவா சொல்லுங்கள்.

சொர்க்கத்து கதவுகளின் கள்ளத் திறப்புகளை கையில் வைத்திருக்கும் களவானிகளே! சொர்க்கம் என்பது இடமல்ல என உணர்க; அதுவோர் உணர்வெனப் புரிக; அதுவொரு திறந்த கதவுக் கொள்கையெனக் காண்க.

எனது மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள காங்கேயனோடைக் கிராமத்தில் 60 களின் நடுப்பகுதியில் தொழாதவர்கள் மவுத்தானால் அவர்களை அடக்குவதற்கென்று அவ்வூர் மையவாடியில் தனியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அவ்விடத்தில் ஆறு பொது மலசலகூடங்கள் அமைந்திருந்தன. அதனால்தான் தொழாத முஸ்லிம்களுக்கு அவ்விடம் ஒதுக்கப்பட்டது. பின்னர் 80 களில் இவ்விடம் மாடுகள் அறுக்கும் மடுவமானது. இப்போது இவ்விடம் சிறுவர் பூங்காவாக இருக்கிறது.

மனிதர்களைப் பிரித்தோம், மஸ்ஜித்களை பிரித்தோம், வழிமுறையை இயக்கங்களாகப் பிரித்தோம், மரணத்தின் பின் அடக்கும் இடத்தையும் பிரித்தாயிற்று. கிழித்துக் கிழித்துப் பிரித்து நார் நாராக்கி தொங்கவிட இன்னும் வருவார்கள் அவர்களும் இவர்களும். கிழிபடுவது நமது எதிர்காலப் பரம்பரை என்பதை நினைக்கையில் நெஞ்சம் திகைக்கிறது.

Basheer Segu Dawood


14 comments:

  1. idukku pinnadiyawadu konjam wekkam waratum endruthan inda mudiwu nalladu

    ReplyDelete
  2. கேடு கெட் ட. சமூகமாக நாம் ஆகிவிட்டோம் நோன்பு பிடித்தவன் பிடிக்காதவன் சகாத் கொடுத்தவன் கொடுக்காதன் என்று இப்படியே பிரித்துகொடோண்டு போனால் மயத்துகளை அவரவர் வீடுககில் அடக்க வேண்டியதுதான்.

    ReplyDelete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. அனைவரும் தொழுகையாளியாக மாற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் செய்திருக்கலாம்.

    ReplyDelete
  5. படிப்பறிவற்ற சில எருதுகள் எமது பள்ளிவாயல்களை ஆட்சி செய்துகொண்டிருக்கிறது.

    ReplyDelete
  6. உண்மையில் நல்ல விடயம்

    தொழுகை இல்லாதவனுக்கு இஸ்லாத்தில் பங்கில்லை
    ஒரு முஸ்லீமுக்கும் காபிருக்கும் வித்தியாசம் தொழுகையே
    .
    .
    .

    ஒவ்வொரு முஸ்லிமின் மையவாடிகளும் பிரிக்கப்படவேண்டும்

    ReplyDelete
  7. Nawas, இந்த ஹதீஸ் சேகுதாஉத்துக்கு தெரியாது. அவர் எப்போதும் அவருக்கு சார்பாக விவாதம் செய்வார்

    ReplyDelete
  8. மிஸ்டர் பசீர் சேகுதாவுதே உங்களைபற்றயே நீங்கள் விளங்கிகொள்ளாமல் பகுத்தறிவாதத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளீர்! சுவர்க்கம் நரகம் என்பது ஒரு இடம்மல்ல மாற்றமாக அது உணர்வு என்று சொல்லிவுள்ளீர் என்ன ஆதாரம் உலகத்தில் உள்ள எந்த மார்க்கவாதியிடமோ அல்லது மதவாதியிடமோ அதைபற்றிகேட்டால் அவைகள் இன்பங்களையும் வேதனைகளையும் அனுபவிக்கும் இடம்மென்று ஆதாரங்களுடன் எடுத்துகாட்டுவார்கள் கேட்டு தெரிந்து கொள்ளவும்.

    ஆம் அல்லாஹு தொழாதவர்களை தண்டிக்க பிரத்தியேகமாக "சகர்" என்ற நரகத்தை படைத்துள்ளான் இதோ தெரிந்து கொள்ளும
    قالواماسلككم فى سقر قالوا لم نك من المصلين
    உங்களை சகர் நரகத்தில் உள்ளே போட்டது எது என்று கேட்பார்கள் (அந்த நரகவாசிகள் ) நாங்கள் தொழவில்லை என்று பதில் சொல்வார்கள்

    (74அல் முத்தஸிர்:42,43)


    ReplyDelete
  9. ஞாயமான கோபம். இன்னும் காட்டுவாசிகளாக வாழ்கின்றனர். இந்த உலகில் இப்படியான மூடர்களும் வாழ்கின்றனர் என்பதனை அறியும்போது ஆச்சரியமாக இருக்கிறது.

    ReplyDelete
  10. This is not a good example. Stop childish acts right now. There are also people of hell who prayed regularly but will go to hell. so where is the location to bury them in your cemetery?

    ReplyDelete
  11. தொழுகை தொழாதவனுக்கு இஸ்லாத்தில் எந்த பங்கும் இல்லை...!
    இந்த உரையில் முழுமையான பதிலுண்டு, கேட்டுப்பாருங்கள் புரியும்...
    https://www.youtube.com/watch?v=s6T_AIx0cxM

    ReplyDelete
  12. மீசையை வலித்து தாடியை வளர்த்து கண்ணுக்கு கருப்பு பூசி தலைக்கு செம்பட்டை. பூசி ஒருவர் இருந்தால் இதுவெல்லாம் முஸ்லிமுக்கும் காபிருக்கும் உள்ள வித்தியசம இல்லையா?

    ReplyDelete
  13. கட்டுவண்வில மஸ்ஜித் நிர்வாகம் செய்ததில் யான் தவரேதும் காணேண். அவர்கள் செய்தது "அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதே"! நபி (ஸல்) அவர்களும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவராகவே இருந்தார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.