Header Ads



நாளை செவ்வாய்கிழமை பிறை பாருங்கள், ஒரே நாளில் பெருநாள் கொண்டாடுங்கள்


நோன்புப் நெருநாள் தின­மான ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாடு நாளை செவ்­வாய்க்­கி­ழமை மஃரிப் தொழு­கையைத் தொடர்ந்து கொழும்பு பெரி­ய­பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது.

மேற்­படி பள்­ளி­வா­சலின் நிரு­வா­கிகள், பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்­பி­னர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், மேமன், ஹனபி பள்­ளி­வாசல் நிரு­வா­கிகள் ஆகியோர் மெள­லவி அப்துல் ஹமீத் பஹ்­ஜியின் தலை­மையில் தலைப்­பி­றையைத் தீர்­மா­னிக்கும் மாநாட்டில் கலந்து கொள்­ள­வுள்­ளனர்.

குறித்த தினம் தலைப்­பி­றையைக் கண்­ட­வர்கள் 011 2432110, 077 7140939, 077 7316415 ஆகிய தொலை­பேசி இலக்­கங்­க­ளுடன் தொடர்பு கொண்டு அறி­விக்­கும்­படி கேட்­கப்­ப­டு­கின்­றனர்.

2

முஸ்­லிம்கள் எவ்­வித கொள்கை முரண்­பா­டு­க­ளு­மின்றி அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் வழி­காட்­ட­லுக்­க­மைய ஒரே தினத்தில் நோன்புப் பெரு­நாளை நாடு­மு­ழு­வதும் கொண்­டாட வேண்­டு­மென  எம்.எச்.ஏ. ஹலீம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

முஸ்­லிம்­களின் ஒற்­று­மையைச் சிதைப்­ப­தற்கு நாட்டில் ஒரு சில பிரி­வி­னரால் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தாக முறைப்­பா­டுகள் கிடைத்­து­வ­ரு­கின்­றன. எனவே இவ்­வா­றான சூழ்­நி­லை­களில் முஸ்­லிம்கள் கொள்கை வேறு­பா­டு­களை மறந்து தூர­நோக்­குடன் செயற்­பட வேண்டும். முஸ்­லிம்கள் இன­வா­தி­களின் சூழ்ச்­சிக்கு பலி­யா­கி­வி­டக்­கூ­டாது எனவும் அவர் தெரி­வித்­துள்ளார்.

4 comments:

  1. எமது ஒற்றுமையை காட்டுவதற்கு மிச்சிறந்த தருணமாக கொண்டு தயவு செய்து ஒன்றுபடுங்கள்.

    ReplyDelete
  2. கடந்த காலங்களில் ஜம்மியத்துல் உலமா அரசாங்க கட்டுப்பாட்டில் அரசாங்கம் கூறிய தினங்களில் பெருநாளை கொண்டாடியது
    பொதுமக்கள் அறிவித்ததை புறக்கணித்தது என்று குற்றச்சாட்டு உள்ளது அது இல்லாமல் பிறை கண்டதும் அறிவித்தல் கொடுக்க வேண்டும் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகின்றோம் ஜமியத்துல் உலமா சபையினால் உங்களால்தான் சீர்கெட்டது பெருநாள் தினங்கள் இப்படிக்கு நல்லிணக்கம்.

    ReplyDelete
  3. ஜம்மிய்யத்துல் உலமாவிற்கு ஓர் அன்பான வேண்டுகோள் கடந்த காலங்களில் பொதுமக்கள் பிறை கண்டதாக அறிவித்தும் அதை ஜம் இயத்துல் உலமா சபை நிராகரித்தது என்று மாபெரும் குற்றச்சாட்டு ஜமியத்துல் உலமாவின் மீது உள்ளது உங்களால் தான் பெருநாள் இரண்டாக பிரிந்து சீர்கெட்டது என்பது அனைவரின் கருத்தாகும் இதை பரிசீலனை செய்து மக்களுக்கும் இடையில் பிளவு வராமல் பாதுகாத்துக் கொள்வதே உலமா சபையின் கடமையுமாகும் நீங்கள் தவறு செய்யும் போது மக்கள் மத்தியில் பிளபுகள் ஏற்படுகின்றது.

    ReplyDelete
  4. தரீக்கா காரர்களுக்கு செவ்வாய் பெருநாள் யாரை ஒற்றுமை பட அழைக்கிரீர்கள்

    ReplyDelete

Powered by Blogger.