Header Ads



26.000 முறை உச்சரிக்கப்பட்ட, மதூஷின் பெயர்

துபாயில் கைதுசெய்யப்பட்டிருந்த பிரபல பாதாள உலகத் தலைவர் மாகந்துரே மதூஷின் பெயரை அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் 26,000 முறைக்கு அதிகமாக உச்சரித்துள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.  

மாகந்துரே மதுஷ் என அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஷித கடந்த மாதம் 05 ஆம் திகதி துபாயிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். குற்றப்புலனாய்வு திணைக்களம் இவரிடம் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. 

நாட்டிலிருந்து தப்பிச்சென்று துபாயில் வாழ்ந்த மாகந்துரே மதுஷ் உள்ளிட்ட குழுவினர், கடந்த பெப்ரவரி 05 ஆம் திகதி போதைப்பொருளுடன் துபாயில் உள்ள ஹோட்டலொன்றில் கைதுசெய்யப்பட்டனர். மதுஷுடன் 30 பேர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் நாடுகடத்தப்பட்டதுடன், பெரும்பாளனவர்கள் விசாரணைகளின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். கஞ்சிபானை இம்ரான் உள்ளிட்ட சிலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றர்.  

மாகந்துரே மதூஷ் கைதுசெய்யப்பட்ட நாள்முதல் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெறும்வரை இலங்கையிலுள்ள அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் இவரது பெயருடன் கூடிய செய்திகளே பிரதான செய்திகளாக இடம்பெற்றிருந்தன.

அதன் அடிப்படையில்தான் 26,000 முறை மதூஷின் பெயர் அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியானதாக சிரேஸ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார். 

1 comment:

Powered by Blogger.