Header Ads



முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு, ஏற்கனவே தண்டனை வழங்காமையே புதிய வன்முறைகளுக்கு காரணம்

இலங்கையில், குற்றத்தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்கப்படாமையே அண்மைக்கால வன்முறைகளுக்கான காரணம் என்று சர்வதேச மன்னிப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து ஒரு தசாப்தம் கடந்துவிட்ட போதும், அரசாங்கம் சர்வதேசத்திடம் வழங்கிய உறுதிமொழிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நாட்டின் தொடர்ந்தும் இடம்பெறுகின்றமை கவலையளிக்கிறது.

சர்வதேச சட்டங்கள், மனித உரிமைகள் சட்டங்கள் என்பனவற்றை மீறியும், துஸ்பிரயோகங்கள் ஊடாக குற்றங்களைப் புரிந்தவர்கள் பொறுப்புக்கூறல் மூலம் தண்டிக்கப்பட வேண்டும்.

ஆனால் அவ்வாறு அல்லாது குற்றவாளிகள் தண்டனைகளில் தப்பிக் கொள்கின்ற வசதி இலங்கையில் நீடிப்பதனால், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களும் தொடர்ந்த வண்ணம் இருப்பதாக, சர்வதேச மன்னிப்பு சபையின் தென்னாசிய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் தெரிவித்துள்ளார்.

2 comments:

  1. சர்வதேச மன்னிப்பு சபைக்கு ஏன் தேவை இல்லாத வேலை. உங்களை தான் இலங்கை பக்கம் வர வேண்டாம் என்று முஸ்லீம் அரசியல் வாதிகள் ஜெனிவா வரை போய் சொன்னார்களே. இலங்கையில் நியாயமானதும் சுயாதீனமுமான நீதி பொறிமுறை உண்டு என அவர்கள் தான் கடந்த காலங்களில் தமிழர்களின் நீதியை தடுப்பதட்காக கூறி வருகின்றனர். பிறகு ஏன் அவர்களுடைய உள்ளக விடயங்களில் நீங்கள் தலையிடுகிண்றீர்கள். சிங்களவராச்சு முஸ்லிம்களாச்சு அவர்கள் பார்த்து கொள்ளுவார்கள்.

    ReplyDelete
  2. @ anush- நாய்க்கு ஏன் தோல் தேங்காய்,
    முதலில் உன்ட நாத்தத்தை கழுவு

    ReplyDelete

Powered by Blogger.