May 26, 2019

முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குவதாக சொல்லியோர், இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்

இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில்,பாரிய அளவிலான அரச பயங்கரவாதத்தினை எதிர்கொள்ளும் நெருக்கடிமிக்க தருணமிது எனச் சொல்லலாம் . இலங்கை முஸ்லிம்கள் சிங்கள இனவாதத்தினையும் அதன் மோசமான உட்கூறுகளையும் ,நாளாந்த நிர்வாக நடவடிக்கை தொடக்கம் இனவாதத்தின் அடியாக கட்டப்பட்டிருக்கும் முப்படைகளின் செயற்பாடுகளையும் கண்கூடாக இப்போது அனுபவிக்கின்றனர்.

இப்படியான சமூக சூழலில்,முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்குவதாக சொல்லிக் கொண்டு இதுவரை அமைச்சுப் பதவிகளையும் பாராளுமன்ற பதவிகளையும் சொகுசாக சுகித்துக் கொண்டிருந்த பிரிவினர் இப்போது செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.தங்களை சொந்த மக்கள் முன் நிரூபிக்க வேண்டிய நிலை இன்று வந்துள்ளது.இன்னொரு வகையில் சொல்வதானால் இதுதான் அவர்கள் யார் என்பதை அர்ப்பணமிக்க செயலில் நிறுவ வேண்டிய காலம் என சொல்ல முடியும்.

மக்கள் பிரதிநிதி என்பது சொகுசு வாழ்க்கையல்ல என்பது மெல்ல மெல்ல தெளிவடைகிறது. அரச ஒடுக்குதல், பாதிக்கப்படும் மக்களிடமிருந்து தினமும் இவர்களை நெருக்க தொடங்கும். இனி இவர்கள் பெயரளவிலான மேடைப் பேச்சுக்களை ,ஊடக அறிக்கைகளைக் கடந்து உண்மையாக தங்களை நிருபிக்க வேண்டியுள்ளது.

இவர்கள் செய்யும் குறைந்த பட்ச பணிகளுக்கு , பெருமளவில் சமூக ஊடகங்களில் விளம்பரம் தேட முற்படுவது அரசியல் அயோக்கியத்தனம். இதற்குத்தானே மக்கள் இவர்களை தமது பிரதிநிதிகளாக தேர்ந்து அனுப்பி உள்ளனர்? உங்கள் கடமையை சீராகவும் இப்படியான நெருக்கடி நிலையில் தீர்க்கமாகவும் செய்யுங்கள் என மக்கள் இவர்களை மேலும் மேலும் நிர்ப்பந்திப்பதுதான் இன்றைய மக்கள் கடமை என கருதுகிறோம்!

(இக்கருத்தில் உடன்பாடு கொள்வோர், இப்பதிவை பகிர்ந்து கொள்வதன் வழியாக மக்கள் கருத்தை உருவாக்கி, முஸ்லிம் தலைமைகளை செயலூக்கத்திற்கு தள்ள முயல்வோம்!)

Drawing by TSounthar.

3 கருத்துரைகள்:

எமது அரசியல் வாதிகள் எமக்காக பேசினார் என்பதற்காக எப்படியெல்லாம் போலிக் குர்ரசாட்டுக்கலை முன்வைக்கிரார்கல் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.வடக்கில் புலிகளால் விரட்டப் பட்ட மக்களை மீண்டும் அவர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்த இடத்தில் மீல் குடியேற்றபட்டதை சகித்துக் கொள்ள முடியாமலும்,Sri Lanka வில் Muslim மக்களுக்கு ஏதாவது பிரச்சினை வரும் போது அதற்க்காக முதல் குரல் கொடுப்பதையும் தாங்கி கொள்ள முடியாமல்தான் அமச்சர் ரிசாதுக்கு எதிரான அனைத்து போலிப் பிரச்சினகல் உருவாக்கப்பட்டுள்ளது.என்வே ஒரு Muslim உறுப்பினர் ஒரு விடயத்தில் உறுதியாக மக்களுக்காக போராடும் போது கட்சி பேதமில்லாமல் அடுத்த உறுப்பினர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்தால்,எமது ஒற்றுமையை கண்டால் இந்த இனவாதிகல் தலை தெரிக்க ஓடுவார்கள்.ஆனால் இவ்வாறான ஒரு ஒற்றுமை எமது சமூகத்தில் இடம்பெருவதில்லை.இனியாவது நாம் அனைவரும் ஒண்றாக இனைவோம்.அது இனவாதிகலுக்கு பேரிடியாக இருக்கும் என்பதில் எந்த வித ஜயமில்லை.

அவர்களை காப்பாற்றுவது யார் என்ற நிலைமை நாட்டில் உள்ளது.அவர்கள் தங்களை காப்பாற்றி கொள்ளட்டும்.

Post a comment