Header Ads



மருத்துவர் ஷாபி எனக்கு நன்கு அறிமுகமானவர், அவர் குற்றவாளி என நான் நினைக்கவில்லை

குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் கைது செய்துள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் மருத்துவர் மொஹமட் ஷாஃபி ஷிஹாப்தீன் தனக்கு நன்கு அறிமுகமானவர் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், மருத்துவர் ஷிஹாப்தீன் மீது சுமத்தப்பட்டுள்ள குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை தொடர்பான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவர் குற்றவாளி என நான் நினைக்கவில்லை.

மருத்துவர் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சையை செய்தார் அல்லது செய்யவில்லை என்பது இதன் அர்த்தம்.

இதனால், இந்த விடயம் சம்பந்தமாக பொலிஸார் நடந்தும் விசாரணைகளுக்கு இடமளித்து விட்டு, அரசியல்வாதிகளை ஒதுங்கி இருக்குமாறு கேட்டு கொள்கிறேன் என அவர் கோரியுள்ளார்.

4 comments:

  1. இவன் துவேஷக்காரன் நம்பவேண்டாம் இவன் அவ்வாறு சொல்ல காரணம் முஸ்லிம்கள் இவனை செய்த துரோகத்தில் இருந்து மறந்து விட்டு மீண்டும் இவனுக்கு ஒட்டு போடுவார்கள் தானே.இன்னுமொன்று இவன் சொல்லுறான் அந்த பொலிஸ் விசாரணை எந்தவிதமான பிரச்சினையின்றி தொடரவேண்டும் என்று ஏனெனில் கைதுசெய்யப்பட்ட வைத்தியரின் மருத்துவமனையில் தான் இந்த விடயம் தொடர்பாக ஆராயும் போலீஸ்கரானின் மனைவி மருத்துவ தொழிலை செய்றார் அந்த பெண் மருத்துவர் கைது செய்யப்பட்ட மருத்துவர் மீது அதிகம் துவேசமானவர் ஏனெனில் அவர் முஸ்லீம் என்பதால்,இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம் எப்படியான முடிவு பொலிஸ் விசாரணையின் பின் வெளிவருமென்று.

    ReplyDelete
  2. This news will tell you why he has been arrested:
    https://lankanewsweb.net/news/special-news/43842-business-deal-behind-story-of-sterilizing-women

    ReplyDelete
  3. Dayasiri is a racist. Don't ever trust him. Muslims should be aware of this kind of person when voting for politicians.

    ReplyDelete
  4. what about team which coordinate with that operations

    ReplyDelete

Powered by Blogger.