Header Ads



ஜும்மா நேரத்தில் பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு வழங்கிய பெளத்த, கிறிஸ்தவ மத குருமார்


மினுவாங்கொடை மஸ்ஜிதுல் ஹுஜ்ஜாஜ் பள்ளிவாயில் இன்று -17- ஜும்மா நேரத்தில் மாற்று மதத்தை சேந்த மதகுருக்கள் பாதுகாப்பு வழங்கியுள்ளனர்.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெளத்த விகாரை ஒன்றின் மதகுரு ஒருவரும் கிறிஸ்தவ குருக்கள் இருவரும் தொழுகை வேளையில் பள்ளிவாயலில் அமர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மினுவாங்கொடை பிரதேசத்தில் முஸ்லிம்களுக்கெதிராக இடம்பெற்ற இனவாத வன்முறை சம்பவத்தில் மினுவாங்கொடை மஸ்ஜிதுல் ஹுஜ்ஜாஜ் பள்ளிவாயில் கடுமையாக தாக்கப்பட்டு சேதங்களுக்குள்ளாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Masha allah

    ReplyDelete
  2. இனவாத அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்புக்கு இடி விழுந்துள்ளது.

    ReplyDelete
  3. this is the relationship we have with other religious

    ReplyDelete

Powered by Blogger.