Header Ads



முஸ்லிம் மாணவிகளை உள்வாங்க, மஹிந்த அணி எதிர்ப்பு - மாவனல்லையில் தலைவிரித்தாடிய இனவாதம்

- RS: Mahi -

மாவனல்லை பிரதேச சபையில் பல்கலைக்கழகத்தால் பயிற்சிக்காக அனுப்பப்பட்ட ஐந்து முஸ்லிம் மாணவர்களை உள்வாங்கும் யோசனைக்கு மஹிந்த ஆதரவு பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர்.

பிரதேச சபை அமர்வின் போது இது தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்ட போது, பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் அதற்கு தமது எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். 

பொது ஜன பெரமுன உறுப்பினர் கீர்த்தி பண்டார மடுகொடுவ இது தொடர்பில் உரையாற்றும் போது,

“நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை காரணமாக முஸ்லிம் மாணவிகளை உள்வாங்குவது பாதுகாப்பு அச்சுறுத்தல் என்பதுடன், பிரதேச சபையில் ஊழியர் வெற்றிடங்கள் பூரணமாக உள்ள நிலையில் பயிற்சிக்காக எவரும் உள்வாங்கக் கூடாது” என குறிப்பிட்டார். 

மடுகொடுவ உள்ளிட்ட பொது ஜன பெரமுன உறுப்பினர்களின் கருத்துக்கு ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் காமில் மற்றும் ஐ.தே.க. உறுப்பினர் புத்துல உடகம ஆகியோர் எதிர்ப்பினை வெளியிட்டதுடன், புத்துல உடகம அது தொடர்பில் கருத்துத் தெரிவித்த போது,

 “ அவ்வாறு பாதுகாப்பு பிரச்சினை ஏதும் இருக்குமாயின் குறித்த மாணவிகள் கிராம சேவகர் மற்றும் பொலிஸ் அறிக்கையொன்றை பெற்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தலாம். மாறாக அவர்கள் பிரதேச சபையில் பயிற்சி பெற அனுமதிக்கக் கூடாது எனும் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாது.” – என்றார். 

இதேவேளை,  பிரதேச சபையின் அடுத்த அமர்வில் இந்த விவகாரம் தொடர்பில் நான்கு பேர் இணைந்து பிரேரணையொன்றை கொண்டு வரவுள்ளதுடன், இப்பிரச்சினைக்கு சுமுகமான  தீர்வொன்றினை காண முயற்சிப்பதாகவும் சுயற்சை உறுப்பினர் நபீர் கான் தெரிவித்தார்.

மேலும் குறித்த விவாதத்தின் போது முஸ்லிம் பெண்களது ஆடை தொடர்பிலும் கடுமையான எதிர்ப்பினை பொது ஜன பெரமுன உறுப்பினர்கள் வெளியிட்டதோடு, ஐ.ம.சு.கூ. உறுப்பினர் தம்மிகா மாவனல்லை நகரில் புர்கா தடைசெய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.