Header Ads



4 முக்கிய பெரிய பள்ளிவாசல்கள், விகாரைகளுக்கு சொந்தமான நிலங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன - எஸ்.பி.

அமைச்சர் றிசார்ட் பதியூதீன் அடிப்படைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளுடன் கொண்டிருந்த தொடர்புகள், அவர்களை பாதுகாத்த விதம் பற்றிய தகவல்களை அவருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது வெளியிடப் போவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் மேற்கொண்ட கொள்கை, ஊழல் தொடர்பான சகல தகவல்களையும் வெளியிடப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பு புஞ்சி பொரள்ளையில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

இது சம்பந்தமாக நாடாளுமன்ற தெரிவுக்குழு நியமித்து ரணில் விக்ரமசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியும் சுத்தப்படுத்த மேற்கொள்ளும் முயற்சி மிக மோசமானது.

நிதியமைச்சர் மங்கள சமரவீர, காவிகள் என்று கூறி கௌரவமான பிக்குகளை அவமதிப்பதுடன் இலங்கை சிங்கள பௌத்த நாடு அல்ல என்று மீண்டும் மீண்டும் கூறி, நாட்டில் எந்த வேற்று மதத்தவர் கூட கூறாத திரிபுப்படுத்தப்பட்ட கதையை கூறி வருகிறார்.

தேராவாத பௌத்த மதத்தின் தலைமையகம் இலங்கை என்பதை வெளிநாடுகள் கூட ஏற்றுக்கொண்டுள்ளன. பேராயர் கூட இதனை கூறியுள்ளார். இவர்கள் இவ்வாறு கூறும் போதே மங்கள இந்த கதையை தெரிவிக்கின்றார்.

இலங்கையின் பிரதான முஸ்லிம் பள்ளி வாசல்களான அஸ்கிரிய பள்ளிவாசல், உடநுவர பெரிய பள்ளிவாசல், கம்பளை பெரிய பள்ளிவாசல், குருணாகல் பெரிய பள்ளிவாசல், ஆகிய முஸ்லிம் பள்ளிவால்கள் அஸ்கிரிய மற்றும் மல்வத்து விகாரைகளுக்கு சொந்தமான நிலங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

என்றும் நட்புடன் அன்புடன் சகோதரத்துவத்துடன் சகல மதங்களும் இனங்களும் இணைந்து வாழ வேண்டும் என்று கூறும் கலாசாரம் எம்முடையது.

துரஷ்திஷ்டவசமாக இது மங்கள சமரவீரவுக்கு புரியவில்லை. சிங்கள பௌத்த மக்களை ஆத்திரமூட்டும் தேவையே அவருக்கு இருக்கின்றது.

அதேவேளை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை விடுதலை செய்யும் முடிவை ஜனாதிபதி எடுத்துள்ளார்.

ஜனாதிபதி செய்த இந்த உன்னதமான காரியத்திற்காக ஜனாதிபதிக்கு நாம் எமது விசேட கௌரவத்தையும் நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறோம் எனவும் எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. நாட்டில் குழப்பத்தை உண்டு பன்னுரவனுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்.....

    ReplyDelete
  2. You people do not know the history of Sri Lanka, I suppose. Buddhism arrived in Sri Lanka before the Arabians’ arrival. They depended on the, say, Sinhala kings for everything. Kings gave them land, livelihood and wives for them. Mostly the Sri Lankan Muslims are the lineages of them besides jobs in the Royal court. It’s the history. Medieval Sinhalease were not like the people as you are now. Sinhala kings and their citizens more than co-operative with Muslims. They helped each other’s activities whatever. Please read: Concise History of Ceylon by Dr. Paranavithana. History is somewhere but your activities are elsewhere. Even after the independence, there was mutual understanding prevailed between Muslims and Sinhala. Go see where Muslim majority people living area. How these three communities live together. Why you people make differences between them for your political arena. People are living very clear. Do not saw your poisonous seeds among them. If wealth gone for ashes, that’s waste for the country. Mind it. Not only Mosques, also their houses are built in the land of Temples and Sinhala citizens. Go check ancient deeds of the land. How they changed from one hand to another.

    ReplyDelete
  3. மக்களால் வெறுக்கப்பட்டு தோல்வியடைந்த இந்த இனத்துவேசியான எஸ் பீ, இலங்கைக்கு கிடைந்த வெ ளிநாட்டு உதவிப்பணத்தைச் சூறையாடி சொந்த வீடுகட்டி வாழும் கள்ளன்,கள்வர் கூட்டத்துடன் சேர்ந்துகொண்டு அலிபபாக் கூட்டத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றான்.ரிஷாதுடன் உள்ள ஏதோ சொந்த முரண்பாட்டை வைத்து காய் நகர்த்துகிறான்.நீதியும் நேர்மையும் இல்லாத ஒரு ஆட்சியில் இவர் போன்ற கள்வர்களுக்குத் தான் இடம்.

    ReplyDelete

Powered by Blogger.