Header Ads



3 வருடங்களில் இலங்கை அணி பெற்ற முதலாவது வெற்றி

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையிலான 2 வது ஒருநாள் போட்டியில் டக்வெத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றியினை பதிவு செய்துள்ளது. 

இப்போட்டி நேற்று எடின்ப்ரோ மைதானத்தில் நடைபெற்றது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸ்கொட்லாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. 

இதன் அடிப்படையில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 322 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இலங்கை அணி சார்பாக அவிஷ்க 74 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 77 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 66 ஓட்டங்களையும் பெற்றனர். 

பந்து வீச்சில் ஸ்கொட்லாந்து அணி சார்பாக Brad Wheal 3 விக்கெட்டுக்களையும் Safyaan Shari 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

வெற்றியிலக்காக 323 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில் பதிலுக்கு ஸ்கொட்லாந்து அணி துடுப்பொடித்தாடிக் கொண்டிருந்த போது மழையி குறுக்கிட்டதனால் போட்டி 34 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. 

அதனடிப்படையில் துடுப்பொடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி 33.2 ஓவர்கள் நிறையில் சகல விக்கெட்களையும் இழந்து 199 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக் கொண்டது. 

பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் நுவன் பிரதீப் 4 விக்கெட்களையும் சுரங்க லக்மால் 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர். 

அதனடிப்படையில் இப்போட்டியில் இலங்கை அணி டக்வெத் லூயிஸ் முறைப்படி 35 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரினை 1-0 எனக் கைப்பற்றி கடந்த மூன்று வருடங்களில் தாம் பெற்றுக் கொண்ட முதலாவது இருதரப்பு தொடர் வெற்றியினையும் பதிவு செய்துள்ளது.

No comments

Powered by Blogger.