Header Ads



நிலவில் இறங்கும், இஸ்ரேலின் திட்டம் நாசமாய் போனது


உலகில் முதல் முறையாக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட விண்கலம் நிலவின் பரப்பில் மோதி சேதமடைந்தது. 

நிலவின் பரப்பில் தரையிறங்கி புகைப்படங்களை எடுப்பது மட்டுமின்றி, பல்வேறு பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ´பேரேஷீட்´ என்னும் அந்த விண்கலம் நிலவின் பரப்பை தொடுவதற்கு முன்னதாக ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனைகளின் காரணமாக தரையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் நிலவின் மேற்பரப்பை அடைந்த நான்காவது நாடு என்னும் பெருமையை அடைவதற்கு இஸ்ரேல் திட்டமிட்டிருந்தது. 

இதற்கு முன்னர் சோவியத் ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் அரசுத்துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையங்களின் விண்கலன்களே நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளன. 

பிபிசி

3 comments:

  1. இஸ்ரேல் சிறிய நாடக இருந்தபோதும் அதன் முயற்சி அளப்பெரியது. இதில் விட்ட தவறுகளை சரி செய்து மீண்டும் இந்த முயற்சியில் வெற்றி பெரும்.

    ReplyDelete
  2. மத்திய கிழக்கில் உள்ள ஒரு சில வளர்ச்சியைந்த நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று.
    ஆனால், மத்திய கிழக்கில் எண்ணை வளங்கள் இல்லாமல் வளர்ச்சியைந்தும், விண்வெளிக்கு போகும் ஒரே ஒரு நாடு இஸ்ரேல் மட்டுமே.

    ReplyDelete

Powered by Blogger.