Header Ads



சிங்கள இன வீரர் ஒருவரை நிறுத்தி, ஜனாதிபதித் தேர்தலை வெற்றிபெற முடியாது

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குப் பலம் இன்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் வெற்றிபெற முடியாது என நவ சமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

எதிர்க் கட்சிக் குழுக்களினால் ஜனாதிபதித் தேர்தலை இலக்கு வைத்து ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் சமூக சக்தி என்பது சாத்தியப்படாத ஒன்று எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சிங்கள இனத்தின் வீரர் ஒருவரை வேட்பாளராக கொண்டுவந்தால், வெற்றிபெற முடியும் என எதிர்க் கட்சியினர் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். நூதனமான துட்டகைமுனு ஒருவரே இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றே அக்குழு விரும்புகின்றது.

ஜனாதிபதி அவர்களும் இந்தக் கருத்தில் இருந்து கொண்டுதான், இரண்டாவது முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முயற்சிக்கின்றார் என நான் நினைக்கின்றேன்.

நாடு தற்பொழுதுள்ள நிலையில் சிங்கள இன ரீதியில் ஒருவரை வேட்பாளராக நிறுத்தினாலும் வெற்றி பெற முடியுமா? என்ற கேள்வி எழுகின்றது. இந்த நாட்டில் சிங்கள மக்கள் 70 வீதமானவர்கள் உள்ளனர்.

அதிலும், சுமார் 5 சதவீதமானோர் கிறிஸ்தவர்கள் உள்ளனர். 65 வீதமானவர்களே சிங்கள பௌத்தர்கள் என்ற நிலையில் காணப்படுகின்றனர். இவர்கள் தான் துட்டகைமுனு என்ற ஆவேசத்துக்குள் வசீகரிக்க முடியுமானவர்கள். இந்த 65 வீதத்தில் 50 ஐப் பெறுவது என்பது சிரம சாத்திமானது. இதுவும் சிங்கள, தமிழ் மக்களின் வாக்குகள் இன்றி சாத்தியமற்றது எனவும் கூறவேண்டும் எனவும் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன மேலும் குறிப்பிட்டார்.  

No comments

Powered by Blogger.