Header Ads



ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மாத்திரமே, நீதிமன்றத்தை நாடினால் படுதோல்வியே ஏற்படும்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி ஒருவர் ஐந்து ஆண்டுகள்தான் பதவி வகிக்க முடியுமென தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதனால், ஜனாதிபயின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை பெற்றுக்கொள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி முற்பட்டால் அது படுதோல்வியிலேயே முடிவடையும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்தது. 

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தில் ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலம் 5ஆண்டுகள்தான் எனக் கூறப்பட்டுள்ளதுடன், தற்போதைய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட நாளில் இருந்து ஐந்து ஆண்டுகள்தான் பதவியிலிருக்க முடியுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. என்றாலும், இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டமொன்று சபாநாயகர் கையொப்பமிடும் நாளில் இருந்துதான் செல்லுபடியாகும் என்றும் சட்டமானது முன்னோக்கியே செயற்படும் என்றும் லங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.

இதனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 2020ஆம் ஆண்டு ஜுலை 21ஆம் திகதிவரை பதவியிலிருக்க முடியுமென அக்கட்சி கருத்துகளை வெளியிட்டு வருவதுடன், ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானத்தைப் பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

சு.கவின் அறிவிப்புக்கு ஐ.தே.க, ஜே.வி.பி., லங்கா பொதுஜன பெரமுன உட்பட நாட்டின் சிவில் அமைப்புகளும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இது தொடர்பில் ஐ.தே.கவின் நிலைப்பாட்டை அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தினகரன் வாரமஞ்சரியிடம் இவ்வாறு தெரிவித்தார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

No comments

Powered by Blogger.