March 29, 2019

சமூகம்தான் என்னை குற்றவாளியாக்கியது - கஞ்சிப்பான இம்ரான் வாக்குமூலம்

மாக்கந்துர மதுஷுடன் கைது செய்யப்பட்டு டுபாயிலிருந்து நாடுகடத்தப்பட்ட கஞ்சிப்பான இம்ரான் , கொழும்பில் சி ஐ டியினரின் தீவிர விசாரணைகளில் பல முக்கிய விடயங்களை கசிய விட்டிருப்பதாக தகவல்..

பல அரசியல்வாதிகள் , நடிகர்கள் , வர்த்தகர்கள், அரச உத்தியோகத்தர்கள் என பலரின் பெயரை வெளியிட்டுள்ள இம்ரான் தனக்கு உரிய பாதுகாப்பு சிறையில் வழங்கப்படுமானால் மேலும் பல தகவல்களை கூறத் தயாரென கூறியிருப்பதாக அறியமுடிகின்றது.

கஞ்சிப்பான இம்ரானிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில் கிடைக்கப்பெற்ற தகவல்கள் தொடர்பான அறிக்கை மற்றும் சிக்கியிருக்கும் அரசியல் பிரமுகர்களின் பெயர்களை பாதுகாப்புத்துறை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளது.

அதேபோல அவரிடம் வெளியாகிய பாதாள உலகக் கோஷ்டியின் விபரங்கள் ஊடாக உடனடியாக கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி பாதுகாப்புத் தரப்பினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

17 மணி நேர விசாரணைகளின் போது இடையிடையே கண்ணீர் விட்டழுத இம்ரான், சமூகம் தான் தன்னை குற்றவாளியாக்கியுள்ளது என்றும் குறிப்பிட்டாரென உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கொழும்பு விமான நிலையத்தின் ஊடாக தாய்லாந்து சென்று அங்கிருந்து ஐரோப்பிய நாடொன்றிற்கு செல்லவிருந்த இம்ரானுக்கு கொழும்பு விமான நிலையத்தில் டிரான்சிட் ஊடாக தப்பிச் செல்ல உதவியவர்கள் குறித்தும் விசாரணைகள் நடப்பதாக அறியமுடிகின்றது.

T+n 

13 கருத்துரைகள்:

இம்ரானும் எம் சமூகத்தை சார்ந்தவர் தான். அவரின் நேர்வழிக்காக நாம் அல்லாஹ்விடம் இறைச்சுவோம்!!!!

Hang him to death...
After death God let him forgive.....

தான் செய்வதையெல்லாம் செய்த பின் தப்பிக்க முடியாது வழமாக மாட்டிக்கொண்டு சமூகதின் மீது பழி சுமத்துவது எவ்வகையில் நியாயமாகும்.

தலையை வெட்டி கையில் கொடுத்தனுப்புங்கள். போதை பொருள் குற்றவாளிகளுக்கு இதுவே சிறந்த தண்டனையாக இருக்கும்.

@அலி, நாட்டின் இயற்கை வளங்களை அழித்து காணி பிடிப்பவர்களுக்கு என்ன தண்டணை கொடுப்பது?

@Ajan Antonyraj
Thamadhu sontha kaanigalil irunthu 2 mani neraththil veliyanippiya sakkili naaigalukku than dhandanai walangavendum

அஜன்
சரி நாட்டையே துண்டாட நினைச்ச உங்களுக்கு என்ன தண்டனை அண்ணே. நீங்க என்னமோ மனிதகுல மாணிக்கம் மாதிரியே பேசிக்கிட்டு இருக்கீங்க.

Rizman, அப்போ, முஸ்லிம்கள் காடுகள் வெட்டி கள்ள காணிகள் பிடிப்பதை ஒத்துக்கொள்கிறீர்கள். Rizman உங்கள் நேர்மை எல்லாருக்கும் வராது.

Ajan,
சரியான லூசு அண்ணே நீங்க. கிட்டத்தட்ட பல வருடங்களா ஒரு இடத்த சும்மா விட்டா அந்த இடம் காடாக இல்லாம உல்லாச விடுதியாவா இருக்கும் அண்ணே.

This Ajan Antony must be sort of psychologically affected one with preconceived idologies...please don't respond to his comments please...let him to be as he wish...we cant awake one who is acting as sleeping...

Than winai thannai sudum

Kanchippana Imran: What's your father?

Post a Comment