Header Ads



எதிர்க்கட்சியை நம்பி, தோற்றுப்போன ஆளும்கட்சி - லக்ஷ்மன் கிரியெல்லயின் புதிய விளக்கம்

பின்னால் இருந்துக்கொண்டு முதுகில் குத்துவதில் எதிர்க்கட்சியினர் திறமைசாலிகள், வாக்கெடுப்பு நடத்தப்படாது என கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைய ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியினரை நம்பியதால், இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடைந்ததாக அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி பிரதான தபால் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அமைச்சுக்களின் நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடைவது புதிதல்ல. ரத்தனசிறி விக்ரமநாயக்க, ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடைந்துள்ளன.

நிலையியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தோல்வியடைந்த நிதி ஒதுக்கீடுகளை நிறைவேற்றலாம். எதிர்க்கட்சியின் சொல்லை நம்பியதால், இரண்டு அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் தோல்வியடைந்தன.

எதிர்க்கட்சி வழங்கிய வாக்குறுதியை மீறியதால், அரசாங்கம் இந்த நிலைமைய எதிர்நோக்க நேரிட்டது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறக் கூடிய வேட்பாளரை ஐக்கிய தேசியக் கட்சி நிறுத்தும்.ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பெரிய ஒற்றுமை ஏற்பட்டுள்ளது எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.