Header Ads



கோழி பிரியாணி கொடுத்து, அன்பை பகிர்ந்த முஸ்லிம்கள் - பிரித்தானியருக்கு குவிகிறது பாராட்டு


நியூசிலாந்து தாக்குதலை தொடர்ந்து முஸ்லீம் மக்களுக்கு ஆதரவாக பிரித்தானியர் ஒருவர் கையில் பதாகையுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் வெள்ளிக்கிழமை மதியம் தொழுகை நேரத்தின் போது நடைபெற்ற துப்பாக்கி சூடு தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 50 பேர் பலியானதோடு, 40க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவமானது ஒட்டுமொத்த மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பிரித்தானியாவை சேர்ந்த ஒருவர் கையில் பதாகையுடன் ஆதரவு தெரிவிக்கும் புகைப்படமானது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பிரித்தானியாவை சேர்ந்த ஆண்ட்ரூ க்ரேஸ்டோன் என்கிற 57 வயது நபர், தாக்குதல் நடந்த அன்று மடினா மசூதியின் வெளிப்பகுதியில் ஒரு பதாகையுடன் நின்று கொண்டிருந்தார்.

அந்த பதாகையில், "நீங்கள் என்னுடைய நண்பர்கள். நீங்கள் பிராத்தனை செய்யும் பொழுது உங்களை பார்த்துக்கொள்வேன்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

மனிதாபிமானத்தை போற்றும் வகையில் உள்ளூர் முஸ்லீம் சமுதாயத்தினரை தான் காப்பாற்றுவேன் என, அவர் செய்திருந்த இந்த காரியமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதுகுறித்து தனியலார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள அவர், வெள்ளிக்கிழமையன்று தொழுகைக்கு வந்தவர்களிடம் "ஸலாம்" எனக்கூறி வரவேற்றேன்.

ஆரம்பத்தில் ஒரு சிலர் எதிர்ப்பாளராக இருக்குமோ என்கிற அச்சத்துடன் என்னை பார்த்தனர். பதாகையில் இருந்த வரிகளை படித்ததும் என்னை பார்த்து லேசாக சிரித்தனர். அந்த சமயம் நான் அவர்களின் நண்பனாக மாறிவிட்டேன் என்பதை உணர்ந்தேன்.

மசூதியில் தொழுகையை முடித்து வெளியில் வந்ததும், அனைவரும் என்னிடம் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். ஒரு சிலர் எனக்கு கோழி பிரியாணி கொடுத்து அன்பை பகிர்ந்தனர்.

நூற்றுக்கணக்கான மக்கள் என்னை சூழ்ந்துகொண்டு நன்றி தெரிவித்து, ஆசிர்வதித்தனர். ஒரு சிலர் மனிதாபிமானத்தை நான் மீட்டெடுத்ததாக கூறினார்கள். அந்த சமயம் ஒருவர் என்னை படம் பிடித்தார். ஆனால் அந்த படம் இந்த அளவிற்கு செல்லும் என நான் நினைக்கவில்லை. தற்போது உலகெங்கிலும் பலராலும் பகிரப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.