Header Ads



பாகிஸ்தானுக்கான நாளைய, விமான சேவைகள் ரத்து - ஸ்ரீலங்கன் விமான சேவை

இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நாளைய தினம் பாகிஸ்தானின் கராச்சி, லாகூர் விமான நிலையங்களுக்கான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் சிவில் விமான சேவைகள் அதிகார சபை, அந்நாட்டு விமான பிராந்தியத்தை தற்காலிகமாக மூடியதை அடுத்து, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கு பயணங்களை மேற்கொள்ள தயாராக இருந்த பயணிகள் தமது பயண முகவர்கள் அல்லது www.srilankan.com என்ற இணையத்தளத்திற்கு சென்று மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டால், ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருந்துவதாகவும் விமான பயணிகளின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற காரணத்தினால், இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் ஸ்ரீலங்கன் கூறியுள்ளது.

ஏற்பட்டுள்ள நிலைமையை விமான நிறுவனத்தினால், எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியாது எனவும் நிலைமை சம்பந்தமாக உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கு இடையில் போர் ஏற்படலாம் என்ற பதற்றம் தெற்காசிய பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு பாகிஸ்தானிற்கும் இடையில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக இலங்கை விமான சேவை நிறுவனம் இத்தீர்மானத்தை எடுத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.