Header Ads



விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார் நஷாத் நாவஸ்


இலங்கையின் தலை சிறந்த தொழில் முனைவோர்களை கௌரவப்படுத்தும் "Sri Lankan Entrepreneur of The Year 2018” என்ற கருத்திட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருதுவழங்கும்  விழாவில் கைத்தொழில் மற்றும் உற்பத்தி துறையில் பாரிய அளவிலான பிரிவில் வயம்ப பிரிண்ட்பக் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்  நஷாத் நாவஸ் மாகாண மற்றும் தேசிய அளவில் “Young Entrepreneur of The Year 2018" விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

தேசிய ரீதியில் நடாத்தப்படும் இந்த விருது வழங்கல், தொழில் முனைவோரின் வளங்களுக்கான ஏற்பாடுகள் , அவற்றின் உச்சகட்ட பயன்பாடு, தலைமைத்துவம், சவால்களை எதிர் கொள்ளும் தன்மை, முகாமைத்துவ திட்டம் மற்றும் அவற்றின் செயற்பாடுகள், நிபுணத்துவம் மிக்க நடுவர் குழுவினால் ஆராயப்பட்டு பலத்த போட்டிகளுக்கும் சவால்களுக்கும் மத்தியில் தேர்ந்தெடுக்கப்படும்.

அத்துடன் வயம்ப பிரிண்ட்பக் நிறுவனமானது 2016ம் ஆண்டு நடந்த தீ விபத்தில் முழுமையாக தீக்கிரையாக்கப் பட்டது. அதனை தொடர்ந்து குறுகிய 4 மாத காலத்தினுல் உயர் தொழில்நுட்பத்துடன் கூடிய, சர்வதேச தரத்திலான இயந்திரங்கள் ஐரோப்பா மற்றும் யப்பானில் இருந்து தருவிக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டமைக்காக  வடமேல் மாகாணத்தின் " Golden award for Best Entrepreneur of 2017”  விருதும் வழங்கப்பட்டது.

வளர்ந்து வாரும் தொழில் முனைவோரான  நஷாத் நாவஸ்  கண்டி திருத்துவ கல்லூரியின் பழைய மாணவரும், மலேசியா Swinburne Universityன் வியாபார முகாமைத்துவ பட்டதாரியும் ஆவார். Nippon PVC Holdings (Pvt) Ltd, Nippon Bags (Pvt) Ltd, Nippon Helmet & Toys (Pvt) Ltd., போன்ற நிறுவனங்களின் நிறைவேற்று பணிப்பாளரான இவர்,  நிப்போன் குழுமத்தின் தலைவரும் , தொழிலதிபருமான அக்குரனை நாவஸ் ஹாஜியாரின் கனிஷ்ட புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 comments:

Powered by Blogger.