Header Ads



பொது வேட்பாளராக போட்டியிடுவது, எனது தற்போதைய நோக்கமல்ல - சஜித்

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் பொது வேட்பாளராக போட்டியிடுவது தற்போதைய நோக்கமல்ல.  10 வருடங்களில் செய்து முடிக்க வேண்டிய பணிகளை கிடைக்கப்பெற்றுள்ள குறுகிய 10 மாதங்களில் செய்து முடிப்பதே எனது பிரதான நோக்கம் என வீடமைப்பு, கட்டட நிர்மான மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

வீடமைப்பு, கட்டட நிர்மான மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பதவி பொறுபேற்க்கும நிகழ்வு இன்று வியாழக்கிழமை அமைச்சில் இடம்பெற்றது. அமைச்சு பொறுப்பேற்றதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

மேலும் எனக்கு கிடைத்த பணிகளை முறையாக நிறைவேற்றியதன் பின்னர் சரியான நேரத்தில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவதா? இல்லையா ? என்ற அடுத்த தீர்மானத்தை அறிவிப்பேன் என்றும் சுட்டிக்காட்டினார்.  

அவர் மேலும் குறிப்பிடுகையில், 

கிடைக்கப்பெற்றிருக்கும் 10 மாதங்களில் 10 வருத்தில் செய்து முடிக்கவேண்டிய பணிகளை முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்கு உள்ளது. இந்த குறித்த காலப்பகுதிக்கு 10 வருடத்தில் செய்ய வேண்டிய பணிகளை செய்து முடிபோம். மேலும் பொது சொத்துக்களை பாதுகாத்து மக்களின் சுபீட்சமான வாழ்க்கைகான பணிகளையும் முன்னெடுப்போம்.

No comments

Powered by Blogger.