Header Ads



முஸ்லிம்களிடம் இதுவரை இல்லாத அளவு, போதை அதிகரித்துள்ளது - பொலிஸ் அதிகாரி சிசிர கவலை


இலங்கையில் இதுவரை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியிலும், தமிழ் மக்கள் மத்தியிலும் அதிகரித்திருந்த போதைப் பொருள் பயன்பாடு தற்போது முஸ்லிம்களுக்கு மத்தியிலும் அதிகரித்துள்ளமை மிகவும் வருத்தமளிக்கிறது. முஸ்லிகளின் மார்க்க கட்டுப்பாடு போதைப் பழக்கத்தை விட்டும் அவர்களை தூரமாக்கியிருந்த நிலையில் தற்போது போதை பயன்பாடு அதிகரித்து வருவது ஆரோக்கியமற்றது என பண்டாரவல பொலிஸ் நிலைய போதைத் தடுப்பு பொலிஸ் அதிகாரி சிசிர புலத் சிங்கள தெரிவித்தார். 

நாடு முழுவதும் சுமார் 13% பாடசாலை மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ளதாக போதைப் பொருட்களை தடுப்பதற்கான ஜனாதிபதியின் செயலணி நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அனைத்துத் தரப்பிலும் போதைப் பொருளுக்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுப்பது கட்டாயமாகும். அந்த வகையில் சிலோன் தவ்ஹீத் ஜமாத்தினர் (CTJ) பாடசாலை மாணவர்கள் மத்தியில் மேற்கொண்டு வரும் இந்த நிகழ்ச்சிகள் பாராட்டத்தக்கதாகும் என்றும் மேலும் அவர் தெரிவித்தார்.

சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ) - பண்டாரவல கிளை சார்பில், பண்டாரவல அல்-யாசீன் முஸ்லிம் வித்தியாலய மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட “பாதை மாற்றும் போதை” என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாரு தெரிவித்தார். 

இலங்கையில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பயன்பாடு தொடர்பில் சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ) சார்பில் நாட்டின் பல பகுதிகளிலும் விளிப்புணர்வு பொதுக்கூட்டங்களும், பாடசாலை மட்ட கருத்தரங்கங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக நேற்றைய தினம் (18.10.2018) பண்டாரவலை அல்-யாசீன் முஸ்லிம் வித்தியாலயத்தில் மெற்கண்ட நிகழ்ச்சி நடத்தப்பட்டது. 

சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ) - பண்டாரவல கிளை நடத்திய மேற்கண்ட நிகழ்வில் பொலிஸ் அதிகாரி சிசிர அவர்கள் காட்சி ஊடகம் மூலம் போதை பயன்பாடு தொடர்பில் விளக்கமளித்தார். CTJ துணை செயலாளர் சகோ. ரஸ்மின் MISc அவர்கள் “பாதை மாற்றும் போதை” என்ற தலைப்பில் போதைப் பொருள் பயன்பாடு மாணவர்களின் எதிர்காலத்தை எவ்வாரெல்லாம் பாதிக்கிறது என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார். 

சிலோன் தவ்ஹீத் ஜமாத் (CTJ), வின் கிளைகள் ஊடாக போதைப் பொருள் மற்றும் சமூக தீமைகளுக்கெதிரான பிரச்சாரத்தை நாடு முழுவதும் பாரியளவில் முன்னரை விட அதிகமாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதுடன் பாடசாலை மட்ட கருத்தரங்குகளை அதிகமாக நடத்துவதின் மூலம் மாணவர்கள் மத்தியில் பரவ ஆரம்பித்துள்ள போதை பயன்பாடை தடுக்கும் முயற்ச்சியையும் தொடர்ந்தும் மேற்கொள்ளவுள்ளது. 

ஊடகப் பிரிவு,

சிலோன் தவ்ஹீத் ஜமாத் - CTJ.



2 comments:

Powered by Blogger.