Header Ads



அஞ்சா நெஞ்சர்கள் நிஸாமும், சலீமும் இடமாற்றப்பட்டனர்

-முஹமட்-

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.ரி.அப்துல் நிஸாம் கல்வி அமைச்சின் மேலதிக செயலளராக நியமிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண கல்விப் பணிப்பராக எம்.மன்சூர் நியமிக்கப்பட்டுள்ளார். இதே வேளை, கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக கடமையாற்றிய  முஹமட் சலீம் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக மணிவண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனங்களை கிழக்கு மாகாண ஆளுநர் ரோகித போகலாகம செய்துள்ளார்.

கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய அப்துல் நிஸாம் முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் எம்.ரி.ஹஸன்அலியின் சகோதரராவார். ஹஸன்அலியின் தம்பி என்பதனால் பல தடவைகள் அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டுள்ளார்.

இவர் நிந்தவூர் தேசிய பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய போது ஹஸன்அலியின் தம்பி என்பதனால் ஐக்கிய தேசிய கட்சியினரால் அவரது திருமணத்தன்று இடமாற்றம் செய்யப்பட்டார்.

கல்முனை வலயக் கல்வி காரியாலயத்தில் கடமையாற்றிய போதும் அரசியல் பலி வாங்கப்பட்டார். அவருக்கு வழங்கப்பட வேண்டிய வலயக் கல்விப் பணிப்பாளர் நியமனம் காலதாமதப்படுத்தப்பட்டது.

மேலும், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக செயற்பட போது 2006ஆம் ஆண்டு இடமாற்றம் செய்யப்பட்டு மேலதிக செயலாளர் நியமனம் வழங்கப்பட்டது. இதன் பின்னணியில் முன்னாள் அமைச்சர் அதாவுல்லா இருந்தார்.

தற்போது மீண்டும் மாகாண கல்விப் பணிப்பாளர் நியமனத்திலிருந்து தூக்கப்பட்டுள்ளார். இதற்கு  முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவரும், ஒரு சில தமிழ் அரசியல்வாதிகள் உள்ளதாக கூறப்படுகின்றறன. இந்த இடமாற்றம் கூட ஹஸன்அலியின் தம்பி என்பதற்காகவே நடைபெற்றுள்ளது. 

இதே வேளை, அப்துல் நிஸாம், கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளராக கடமையாற்றிய முஹம்மது சலீம் ஆகிய இருவரும் அரசியல்வாதிகளின் ஆட்டங்களுக்கு தாளம் போடுவதில்லை. இவர்கள் தங்களின் கடமையை செய்வார்கள். என்ன அழுத்தங்கள் வந்தாலும் அசையாமல் கடமையாற்றியவர்கள். எதிர்வரும் மாகாண சபைத் தேர்லை எதிர் கொள்ள வேண்டுமாயின் தங்களுக்கு ஏற்றவாறு தலையாட்டும் அதிகாரிகளை முஸ்லிம் கட்சி ஒன்றும், தமிழ் கட்சியின் கூட்டமைப்பும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் எனவும் தெரியவந்துள்ளது.

திருகோணமலை பொத்துவில் போன்ற ஆசிரியர் பற்றாக்குறையுள்ள இடங்களுக்கு ஆசிரியர்களை அப்துல் நிஸாம் நியமித்தார். இவர்களில் பலரை இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாணத்தில் உள்ள முஸ்லிம் கட்சி ஒன்றின் பாராளுமன்ற உறுப்பினர்களும், வேறு கட்சிகளின் அரசியல்வாதிகளும் கேட்டுக் கொண்ட போதிலும் அப்துல் நிஸாம் இடமாற்றம் செய்யவில்லை. கஸ்ட பிரதேச மாணவர்களின் கல்வி முக்கியம் என்று துணிச்சலுடன் இடமாற்றங்களை செய்யாதிருந்தார். 

இதனாலும் ஆத்திரமடைந்த முஸ்லிம் கட்சியின் தலைவர் அரசாங்கத்திற்கு நெருக்கடி கொடுத்து பதவி உயர்வு என்ற   பேரில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

5 comments:

  1. To the writer... (I can see your political baised mentality)
    மன்னாங்கட்டி அஞ்சா நெஞ்சர்கள்.. (i don't know about Saleem, its about Nizam) அதிகாரத்தை அதிகார திமிரோடு பயன்படுத்தியவர் நிஸாம், தனது விருப்பு, வெறுப்புகளுக்கு அமைவாக நியமனங்களை வழங்கி பல பல அநியாயங்களை செய்தவர்.. அரசியல்வாதிகளுக்கு அடிபனியமாட்டார் அது அவருக்கு எதிரானவராக இருந்தால்.. முஸ்லிம், தமிழ் பெண்களை வேற்று மாவட்ட நியமனங்களை நெடும்தூர பிரதேசங்களுக்கு இட்டு குடும்பங்களை பிரித்தவர். (பல பெண்கள் இவரால் வேலையை விட்டுவிட்டு வீட்டுடன் அடங்கிவிட்டார்கள், வேற்று மாவட்ட நியமனங்கள் என்றாலும் பெண்களை ஒரே நாளில் சென்று வரக்கூடிய தூர அமைப்புள்ள வகையில் நியமிக்காமல் அநியாயம் செய்தவர்)

    ReplyDelete
  2. கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளராகக் கடமையாற்றிய ஜனாப். அப்துல் நிஸாம் அவர்களைப்பற்றியும், அன்னாரது சேவையின் உயர்தரத்தைப் பற்றியும் எழுதிக் கொண்டே போகலாம். இவரது அரசியல் அல்லது சமூக எதிரிகள்கூட (இருந்தால்) அவரது அலுவலக செயற்பாடுகளிலோ மற்றும் குணநல இயல்புகளிலோ எவ்வித பிழையினையும் பிடிக்கவே முடியாதவாறு மிகவும் கவனமாகவும் கண்ணியமாகவும் நடந்துள்ளமை உச்சளவில் மிகவும் பாராட்டப்;பட வேண்டிய அம்சமாகும். அவர் தனது கடமையினை பொதுச்சேவை என்ற அடிப்படையில் தன்னிடம் வரும் சகலரும் உச்ச நன்மையினைப் பெறவேண்டும் என்ற அடிப்படையிலேயே செய்துள்ளார். இவரது உயர் அதிகாரிகளினால் இவருக்கு சில கட்டுப்பாடுகள் (Power Execution) விதிக்கப்பட்டிருந்த போதிலும் தன்னிடம் வரும் தேவையுள்ளோருக்கு சீரிய ஆலோசனைகள் மாத்திரமின்றி வேறு பல உதவிகளும் செய்து சந்தோசமாக அனுப்பியுள்ளமை வரலாற்றில் இடம்பெறவேண்டிய விடயமாகும். தன் பொறுப்பிலுள்ள அதிகாரிகளிடமும் ஊழியர்களிடமும் மிகுந்த மனிதாபிமான முறையில் நடந்துள்ளார். புதன்கிழமைகளில் நேரக்கட்டுப்பாடின்றி தேவையுள்ள ஆசிரியர்களைச் சந்தித்து அவர்களது விடயங்களை முடித்துக் கொடுத்துள்ளார். எவரும் அவரிடத்தில் அழுக்காறு கொண்டு நடக்கவில்லை. அவரும் மிகக் கண்ணியமாகவே எல்லோருடனும் நடந்துள்ளார். அன்னாருக்கு புதிய பதவி கிடைத்துள்ளது மகிழ்ச்சிக்குரியது. அதன்மூலம் ஆசிரிய சமூகத்திற்கு தொடர்ந்து நற்சேவை ஆற்றக்கூடிய சந்தர்ப்பம் அவருக்குக் கிடைக்கும்போது ஆசிரிய சமூகம் மிகவும் மகிழ்ச்சி அடையும் என்பது திண்ணம்.

    ReplyDelete
  3. Mr. Mohamed: நீங்க முஸ்லிம் கட்சிதான் நிஸாம் சேருடைய இடமாற்றத்திற்கு காரணம் என்டு எழுதியிருக்கீங்க. மிகவும் மகிழ்ச்சியான செய்தி. அவரவர்கள் அவங்களுக்கு ஏன்ட வேலையைத்தான் செஞ்சு தருவாங்க. நீங்க போய் எங்களுக்கு தென்கிழக்கு மாகாண அலகு வேணும். கல்முனைய பிரிச்சு தனிமாவட்டமா ஆக்கி தரணும். அம்பாறை மாவட்டத்துக்கு குறைந்த பட்சம் முஸ்லிம் மேலதிக அரச அதிபரையாவது நியமிக்க வேணும். சிங்கள குடியேற்றத்தை நிப்பாட்டனும். பறிபோய்க் கொண்டிருக்கும் முஸ்லிம்களுடைய காணி விடயத்தை சீராக்கித்தரனும். முஸ்லிம்களது உரிமைகளைப் பெற்றுத் தரனும். சாய்ந்தமருதுக்கு தனிப் பிரதேசசபை வேனும். சவூதி காசில எங்களுக்கு கட்டின வீட்டை எங்களுக்கே தரனும் என்டெல்லாம் நீங்க சொல்ற எங்கட முஸ்லிம் கட்சிட அரசியல்வாதிகள் தங்கட வாயை தொரக்க முடியாத வெசயத்தை நீங்க கேட்டா எப்படிடா தம்பி செய்து தருவாங்க. இது எல்லாம் முடியுர வெசயங்டகளாடா. தேர்தல்லுன்னு வந்தா மேலுள்ள வெசயத்தை எல்லாம் சொல்லி வாக்கு கேட்பாங்கதான். நம்மளும் ஒரு காதால வாங்கி மத்த காதால விட்டுட்டு அவங்க சொல்ர சின்னத்துக்கும் ஆளுக்கும் புள்ளடியைப் போட்டுட்டு ஏதோ தர்த வாங்கிக்கிட்டு ஒதுங்கிட வேண்டியதுதான. அதுக்குதான் ரெண்டு காத அல்லா மனிசனுக்கு கொடுத்து இருக்கான். வெசயம் புரியாத ஆசாமியா இருக்கியேப்பா. இவையெல்லாம் கேட்டு அரசாங்கத்தோட சண்ட புடிக்கிறதா. இல்லாட்டி தங்கட தங்கட பதவிகளைக் காப்பாற்றி சுகம் அநுபவிக்கிறதா. டேய் மர மண்டுகளா. அஸ்ரப் சேர் மவுத்தாகி 18 வருசம் முடியப் போகுதுடா. நல்ல காலம்டா. அஸ்ரப் சேர்ட காலத்திலயாவது எங்களுக்கு தென்கிழக்கு பல்கலையும் ஒலுவில் துறைமுகமும் கிடைச்சது. இதையாவது தக்க வச்சுக் கொள்வோம்.

    ReplyDelete
  4. good very good. Thank you so much Mr

    governor>

    ReplyDelete
  5. My dear செய்ய முனைபவன்: உண்மையில் நிஸாம் சேர் அவர்கள் அதிகாரத்தை அதிகார திமிரோடு பயன்படுத்தியவர்தான். அதனாற்றான் கஸ்டப் பிரதேசத்திலுள்ள பல பாடசாலைகள் தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களைப் நேரத்திற்குப் பெற்று சீரிய முறையில் கல்வி நிர்வாகம் கொண்டு செல்லப்பட்டது. அரசியல்வாதிகளின் கல்வி நிர்வாகத்தில் அடாவடித்தனமான உள்ளீடுகளை முடிவுக்குக் கொண்டு வந்த முதலாவது கல்விப்பணிப்பாளர் இவரேயென்று கூறுவதும் மிகையல்ல. அதற்காக அரசியல்வாதிகளை இவர் ஓரம் கட்டவில்லை. அவர்களையும் அனுசரித்தே நியமனங்கள், ஒதுக்கீடுகள், இடமாற்றங்கள் என்பவை வழங்கப்பட்டன. அதற்கு எத்தனையோ சான்றுகள் இருக்கின்றன. புதிதாக நியமனம் பெற்ற ஆசிரியர்களை அரச சுற்றறிக்கையின் பிரகாரம் கஸ்டப் பிரதேச சேவைக்கு அனுப்பியதில் என்ன தவறு இருக்கின்றது. ஏன் அங்கெல்லாம் பாடசாலைகளும் மாணவர்களும் கல்விக்கான தேவைகளும் இல்லையா?

    ReplyDelete

Powered by Blogger.