Header Ads



ரொனால்டோவிற்கு ஒரு போட்டியில்தான் தடை - மான்செஸ்டர் யுனைடெட்டிற்கு எதிராக விளையாடுகிறார்


ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆண்டுதோறும் சிறந்த கிளப் அணிகளுக்கு இடையில் சாம்பியன்ஸ் லீக் தொடர் நடத்தப்பட்டு வருகிறது. 2018-19-ம் ஆண்டிற்கான தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இதில் 32 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த அணிகள் 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பிடித்துள்ளது. இந்த அணிகள் தங்களது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.

ஒரு ஆட்டத்தில் ‘எச்’ பிரிவில் இடம் பிடித்துள்ள இத்தாலியின் முன்னணி கிளப்பான யுவான்டஸ் ஸ்பெயின் கிளப் அணியான வாலென்சியாவை எதிர்கொண்டது. யுவான்டஸ் அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்திருப்பதால், அந்த அணி சிறப்பாக விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல் பாதி ஆட்டத்தில் ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆட்டத்தின் 29-வது நிமிடத்தில் யுவான்டஸ் அணிக்கு ‘ப்ரீ ஹிக்’ வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ பந்தை அடிக்க முயற்சி செய்தார். அவருடன் வாலென்சியா வீரரும் சென்றார். அப்போது வாலென்சியா வீரர் கீழே விழுந்தார். உடனே கிறிஸ்டியானா ரொனால்டோ அவரை தலையில் தட்டினார்.

இதனால் நடுவர் அதிரடியாக ரெட் கார்டு கொடுத்து ரொனால்டோவை வெளியேற்றினார். எவ்வளவு மன்றாடியும் நடுவர் தனது முடிவை மாற்றவில்லை. இதனால் ரொனால்டோ கண்ணீர் வடித்தபடி வெளியேறினார். ரொனால்டோ இல்லாமல் யுவான்டஸ் 10 வீரர்களுடன் விளையாடிய யுவான்டஸ் வெற்றி பெற்றது.

யுவான்டஸ் அணி அடுத்த போட்டியில் யங் பாய்ஸ் என்ற அணியையும், அதற்கடுத்த போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணியையும் எதிர்கொள்கிறது. ரொனால்டோ ரெட் கார்டு பெற்றதால் யங் பாய்ஸ் அணிக்கெதிராக விளையாட முடியாது.

அதேவேளையில் இதுகுறித்து ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரித்தது. விசாரணையில் அதிக போட்டியில் விளையாட தடைபோட்டால் முக்கியமான மான்செஸ்டர் போட்டியில் விளையாடாத நிலை ஏற்படும். ஆனால், ஐரோப்பா கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பின் ஒழுங்கு நடவடிக்கை ஒரு போட்டியில் விளையாட மட்டுமே தடைவிதித்துள்ளது.

இதனால் தனது பழைய கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு எதிராக கிறிஸ்டியானோ ரொனால்டோ விளையாடுகிறார்.

No comments

Powered by Blogger.