May 15, 2018

இலங்கையில் ஷிஆஇஸம் + காதியானிஸத்துக்கெதிரான ஆயுதங்கள்...!

-Inaas-

சில நாட்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகையில் ஷிஆ சார்பான பல்கலைக்கழகம் ஒன்றின் விளம்பரம் பிரசுரமானது. அதனை தொடர்ந்து எமது வட்ஸ்ஆப் வீரர்கள் வொய்ஸ் ரேகோட் செய்து குறிப்பிட்ட பத்திரிகையை புறக்கணியுங்கள் குறிப்பிட்ட பல்கலைகழகத்தை புறக்கணியுங்கள் என்று எல்லோருக்கும் Voice Message அனுப்பி ஏதோ பெரிய சாதனை செய்தது போல் இலங்கையில் வேரூன்றி வரும் ஷிஆஇஸத்தையே அழித்துவிட்டதாக எண்ணி ஒய்ந்து போயினர்.

நாம் ஒரு விடயத்தை உணர்ந்துகொள்ள வேண்டும் இந்த நாடு ஒரு ஜனநாயக நாடு ஷிஆஇஸ்ம் மட்டுமல்ல காதியாணிகளுக்கும் இங்கு இயங்க சட்டரீதியான அனுமதியுண்டு.

அவர்களின் நிறுவனங்களுக்கு எதிரான இப்படியான சிறுபிள்ளைத்தனமான பிரச்சாரங்களாலோ வன்முறையாலோ இந்த தீய கொள்கைகளிலிருந்து மக்களை காப்பாற்ற முடியாது. என்பது தான் உண்மை.

அந்தக் கொள்கைகள் கொடிய தீய கொள்கைகளாக இருந்தாலும் அவர்கள் அந்த தீய கொள்கைகளை பரப்ப அவர்களது செல்வங்களை திட்டமிட்டு உரிய இடங்களில் முதலீடு செய்கின்றனர்.

பல்கலைக்கழங்களில் திறமையான மாணவர்களுக்கு உதவித்தொகைகள் வழங்குவதில் இவர்களுக்கு சார்பான கொள்கையுள்ள நாடுகளில் உயர்கல்வி கற்க செல்ல வசதி செய்து கொடுப்பதில் நீண்டகாலத் திட்டத்தோடு செயற்படுகின்றனர்.

ஆனால் நாமோ சமகாலத்துக்கு அத்தியாசியமானது இல்லாமல் வெறுமனே தனிப்பட்ட நிறுவனங்கள் தம்மை பிரபலப்படுத்திக்கொள்ளும் நோக்கோடு முஸ்லிம் சமூகத்தின் பணத்தை கோடி கோடியாக வாரி இரைக்கின்றனர்.

அண்மையில் நான ஒரு விளம்பரம் பார்த்தேன் அகில இலங்ககை ரீதியான ஹிப்ல் மனன போட்டிமுதலாமிடம் பெறுபவருக்கு உம்ரா பயணம் பரிசு (150,000) இரண்டாம் இடம் 50,000 பரிசு மூன்றாம் இடம் 40,0000 பரிசு இப்படி இந்த போட்டியின் பரிசுக்கு மட்டும் பல லட்சங்கள். உண்மையில் இது காலத்தின் தேவைதானா?

இப்படியான ஒரு விடயத்துக்கு லட்சங்கள் செலவழிப்பதில் சமூகத்துக்கு என்ன பயன். இவர்கள் இப்படி அர்த்தமற்ற விடயங்களில் லட்சக்கணக்கில் செலவழிக்கும் அதே நேரம் பல ஆயிரம் மாணவர்கள் தமது உயர்கல்வியை தொடர பணமில்லாமல் அங்குமிங்கும் புலமைப்பரிசில் கேட்டு அலைகிறார்கள்.

உண்மையில் அவர்களின் ஒவ்வொருவரினதும் நிலையை காண பெரிதும் பரிதாபமாகத்தான் இருக்கிறது. ஷிஆஇஸம் காதியானிஸம் போன்ற வழிகெட்ட கொள்கைகள் இந்த திறமையான மாணவர்களை இலக்குவைத்தே தமது பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இவர்களின் பல்கலைக்கழங்களில் மிகக் குறைந்த விலையில் இவர்களுக்கான உயர்கல்வி வழங்கப்பட்டு மேற்படிப்புக்காக இவர்களின் தலைமைநாடுகளுக்கு மூலைசலவை செய்வதற்காக இந்த மாணவர்கள் வெளிநாட்டுக்கு அனுப்பபடுகின்றனர்.

இப்படி ஈரான் நாட்டுக்கு உயர்கல்வி கற்க சென்ற மாணவர்களின் தொகை ஆயிரத்தையும் தாண்டிவிட்டது. நிச்சயம் இவர்கள் எதிர்காலத்தில் நமக்கு சவாலாக வரப்போகிறவர்கள் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

இப்படியான ஒரு சூழ்நிலையில் ஹிப்ல் போட்டிக்கும் உம்றா செல்வதற்கும் பலகோடிகளை நாம் சமூகம் செலவழித்துவிட்டு ஏதோ ஒரு பத்திரிகையில் அவர்களின் விளம்பரம் வரும் போது வட்ஸ்ஆப்பில் கூக்குரலிட்டுவிட்டு ஓய்ந்து போவதில் எந்த அர்த்தமுமில்லை.

நாங்கள் வீணாக குரைத்து குரைத்து இருப்போம் ஷீஆ காதியானிஸம் போன்ற தீய சக்திகள் அவர்களின் வேலையை அமைதியாக கவனமாக நிதானமாக செய்து முன்னோக்கி போய்கொண்டேயிருப்பார்கள். கல்விகற்கும் மாணவர்களுக்கு ஸகாத் மூலம் கல்விக்கடனாக கொடுத்து அவர்களின் கல்விக்கு உதவ முடியும் போன்ற முற்போக்கான ஆதராபூர்வமான பத்வாக்கள் சர்வதேச இஸ்லாமிய சூழலில் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் இன்றைய காலப்பிரிவில் ஷிஆஇஸம் காதியானிஸம் போன்ற தீய சக்திகளிடமிருந்து எமது மாணவர்களை காப்பாற்ற நமது ஸகாத் பணத்திலிருந்தும் நாம் முதலீடு செய்ய முன்வரவேண்டும்.
ஏனெனில் சமூகத்தின் பாதுகாப்போடு நேரடியாக தொடர்புபடும் ஒரு விடயம். கடைசியாக ஒரு விடயத்தை கூறி முடிக்கலாம் என்று நினைக்கின்றேன்.

அண்மையில் முழு இலங்கையையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய நாவலபிட்டியை சேர்ந்த ரிபான் என்ற மாணவனை பற்றி கேள்விபட்டிருப்பீர்கள்.  ஜடீஎன் தொலைகாட்சியில் யூத்வித்டலன்ட என்ற நிகழ்ச்சியினூடாக முஸ்லிம்களினதுமட்டுமல்லாமல் சிங்களவர்கள் தமிழர்கள் அனைவரினதும் பாராட்டை பெற்றவர் தான் ரிபான்.

அந் நிகழ்ச்சியில் நடுவராக கடமையாற்றிய பிரபல கலைஞர் ஒருவர் ரிபான் இந்த நாட்டின் சொத்து அரசு இவரை சிறப்பாக நாட்டு நலனுக்காக பயன்படுத்தவேண்டும் என்று கோரியிருந்தார். இணையத்திலும் கூட பல பல சிங்களவர்களின் பாராட்டை பெற்றார்.

கணிதத்தில் அபரமிதமான ஆற்றலுடைய ரிபான் என்ற அந்த சகோதரனுக்கு முஸ்லிம் சமூகம் என்ன செய்தது? அம்மாணவனை கண்டுகொள்ளவுமில்லை. முஸ்லிம்களின் ஊடகங்கள் கூட உரிய முக்கியத்துவத்தை அந்த மாணவனுக்கு வழங்கவில்லை.

இதே நேரம் எங்காவது ஒரு ஹிப்ல் போட்டியில் ஒரு மாணவன் வெற்றி பெற்றால் தலையில் வைத்து கொண்டாடி விமானநிலையத்தலிருந்து குறித்தவருக்கு செங்கம்பள வரவேற்று கொடுப்போம். ஏன் இந்த பாகுபாடு?

நான் இங்கு ஹிப்லை தரக்குறைவாக பேசவில்லை. இன்றைய காலத்தின் தேவையை முற்படுத்த வேண்டும் என்று சொல்கிறேன்.

ஷிஆஇஸம் காதியானிஸம் போன்ற தீயசக்திகளின் இலக்கும் ரிபான் போன்ற வித்தியாசமான திறமையுள்ள மாணவர்களே. இப்படியான திறமையான மாணவர்களை ஷிஆஇஸமோ காதியானிஸமோ கவ்வ முன்னர் நாம் அம்மாணவர்களுக்கு உரிய கௌரவமளித்து நம்முடன் வைத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும். இல்லையேல் எதிர்காலத்தில் எமது அழிவு அவர்களின் கையால் தான்.

ஆகவே நாம் எமது செல்வங்களை கால முக்கியத்துவமற்ற விடயங்களில் செலவழிக்காமல் இயன்றவரை திட்டமிட்டு கால முக்கியத்துவம் வாய்ந்த செயற்றிடங்களுக்கு செலவழிப்போம்.

தொடரும்……………..

13 கருத்துரைகள்:

Very good article.
The Muslims got priorities wrong ..arabic colleges should be wiped out if you need to teach a true Islamic message to humanity ..they produce some cleric no use for the world we live in?

Many Maulavi's gone to Iran to return as Lawyers. While Maulavi Nusran binnoori preaches school education is Haram.ACJU is silent.

WHO THE HELL IS THIS.BRO DO NOT SHOW YOUR STUPIDITY IN THE PUBLIC MEDIA

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. இந்தக் கட்டுரையாளருக்கு புத்திமங்கிக் கிடக்கிறது. உம்ராவுக்குப் போர பணத்தை ஏழைகளுக்கும், ஹிப்ழுல் குா்ஆனுக்கு செலவளிப்பதை படிப்பதற்கும், பெண்களின் காலத்தின் தேவை கருதி பெண்களின் திருமண வயதல்லையை அதிகரிக்கனும் இப்படியேதான் இவர்ட பேச்சு. நபி அவர்களை ஹுதைபியா உடன்படிக்கைக்கு முன் உம்ரா செய்ய சொல்லாமல் அல்லாஹ் மதீனாவில் உண்பதற்கு வழி இன்றிருந்த ஏழைகளுக்கு கொடுக்க சொல்லி இருக்கலாமே. யார் இப்படிப்பட்ட அல்லாஹ்வுடைய தீன் விடயத்தில் செலவு செய்றாரோ அவர்தான் மற்ற நல்ல விடயங்களுக்கும் செலவு செய்கிறார்கள்.

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. இந்தக் கட்டுரையாளருக்கு புத்திமங்கிக் கிடக்கிறது. உம்ராவுக்குப் போர பணத்தை ஏழைகளுக்கும், ஹிப்ழுல் குா்ஆனுக்கு செலவளிப்பதை படிப்பதற்கும், பெண்களின் காலத்தின் தேவை கருதி பெண்களின் திருமண வயதல்லையை அதிகரிக்கனும் இப்படியேதான் இவர்ட பேச்சு. நபி அவர்களை ஹுதைபியா உடன்படிக்கைக்கு முன் உம்ரா செய்ய சொல்லாமல் அல்லாஹ் மதீனாவில் உண்பதற்கு வழி இன்றிருந்த ஏழைகளுக்கு கொடுக்க சொல்லி இருக்கலாமே. யார் இப்படிப்பட்ட அல்லாஹ்வுடைய தீன் விடயத்தில் செலவு செய்றாரோ அவர்தான் மற்ற நல்ல விடயங்களுக்கும் செலவு செய்கிறார்கள்.

Why do you criticize the way the Iranians act to spread their school of thought, wahhabis of Saudi did same thing before years a go when they gave scholarships to our Sunni students to study in the Saudi extremist universities and get brain washed and send them to srilanka to spread Wahhabism and make division in the name of Quran and Sunnah , So is it halal for saudis and haram for Iranian?

Please this article in full ...understnad it fully...we are spending billions on optional ummarah..while many people around us no food to eat it house to live?
Now tell me your optional ummah or feeeding people which one is important .?
After all; all tax money Saudi Princes spend in wasting

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை. இந்தக் கட்டுரையாளருக்கு புத்திமங்கிக் கிடக்கிறது. உம்ராவுக்குப் போர பணத்தை ஏழைகளுக்கும், ஹிப்ழுல் குா்ஆனுக்கு செலவளிப்பதை படிப்பதற்கும், பெண்களின் காலத்தின் தேவை கருதி பெண்களின் திருமண வயதல்லையை அதிகரிக்கனும் இப்படியேதான் இவர்ட பேச்சு. நபி அவர்களை ஹுதைபியா உடன்படிக்கைக்கு முன் உம்ரா செய்ய சொல்லாமல் அல்லாஹ் மதீனாவில் உண்பதற்கு வழி இன்றிருந்த ஏழைகளுக்கு கொடுக்க சொல்லி இருக்கலாமே. யார் இப்படிப்பட்ட அல்லாஹ்வுடைய தீன் விடயத்தில் செலவு செய்றாரோ அவர்தான் மற்ற நல்ல விடயங்களுக்கும் செலவு செய்கிறார்கள்.

Bro please make istihfar.Your intention is correct but ur example is wrong.Do u thing spemding money to encourage to memorise the quran is unnecessoty.Is thid ur message toward the ramalan...Only few people are spending money for these things.You can pointout the people who are wasting money on unnecessory expenditure.eg wedding...

Today, Muslim world is destroyed not by outsiders but by insiders... Salafi, Wahabi, and many groups destroy islam bit by bit

Mr. Harron Adam ? Are you really Sunni or Shia ?

If you are Sunni... please get to know your real brothers I mean the companions of Muahammed (sal) Aboobaker, Umar, Uthman and Ali (ral) and all of the companions, They brought you the Message of Islam by their sacrifies.

If you are from SHIA... get to know Abdullah Ibn Sabah from Yemen came after the death of Muhammed (sal) and plotted to divide Muslims and made this shia group that does fake love toward the family of Muhammed(sal) and divided the muslims.

Lean the Aqeeda of Shia from their own books.. you will find full of SHIRK and Bida which revolve around worshiping graves, BUT you will find the teachings of Qurana and Muahammed(sal) revolving around Islamic Monothesm ( Worship Allah Alone).

Dear Mr. Haroon (with full respect to you).. All of us love paradise, we call upon each other to help each other.. BUT this can only be achieved by OBEYING QURAN and WAY of Muahmmed(sal) in its pure form. So stay with real friends of Muhammed (sal) and love them. Do not love grave worshipers who called Hussain(ral) to KUFA and left him alone to be killed by KUFA army operated under YAZEED. If they really loved Hussain (ral) as they pretend today.. Why their ancestors 70,000 in numbers signed a letter saying they will protect the our Hussain(ral) and when he visited them in KUFA they left him unprotected ?

Learn the history to know your real brothers and friends and Enemies of your life.

The Persians, do celebrate Karbala and cry for the death of Hussain (ral).. this is really cheating.. You know why ?

Ali (ral) got killed- But they do not remember this day
Hassan (ral) got killed But they do not remember this day

But They only celebrate the day of Karbala you know why ? Hussain (ral) was married to one of Persians princess who they loved very much.

May Allah guide you me and all Muslim in correct path.

இவர் உம்றா நிதிபற்றி சொன்னது முற்றிலும் சரியே. ஹஜ்,உம்றா சொந்த பணத்தில் அதுவும் தேவைகளனைத்தும் நிறைவான நியிலேயே கடமை.

அப்படி 'இதற்கு செலவளிப்பவர் அதற்க்கும் செலவளிப்பா்' என மொட்டயாக முடிப்பவர்கள்; கல்வி ஏனய அத்தியாவசிய தேவைகளுக்கு இளயவர் முதல் முதியவர்வரை அலைவது ஏன்? சோரம் போவது ஏன்? அனைவரும் தம்குறைகளை கூவுவார்களா? கஷ்டத்திலுள்ளவர் ஈமானை விரும்பிமுன்வந்து இழப்பதில்லை. சதி, மூளைச்சலவை மூலமே இவ்வாற தள்ளப்படுகிறார்கள்.

மறுப்பவர்கள் இவ்வாறு நடக்கும் சதிகளில் சுன்னாக்கள் எப்படி விழவைக்கப்படுகிறார்கள், வேறு காறணங்கள் உண்டா என்பதை யோசித்ததுண்டா?

காசுக்காக மார்க்த்தை விற்றுப் பிழைப்பவர்களுக்கு
இந்த கட்டுரை கடும் கோபத்தை ஏற்படுத்தலாம்.
இன்று ஹிப்ல் என்பது பெரும் வியாபாரமாக உருவெடுத்துள்ளது
உம்ரா என்பதும் சுன்னா என்ற தரத்தை தாண்டி
பர்ளு என்ற மாயையை டிரவல்ஸ் மார்க்க வியாபாரிகள் ஏற்படுத்தியுள்ளனர்.

இன்னுமொரு முறை இக்கட்டுரையை தெளிவாக வாசியுங்கள்
ஹிப்ல் உம்றா கூடாது என்று எங்கும் குறிப்பிடவில்லை
இந்த இரண்டையும் விட முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய
விடயம் பற்றியே தெளிவான உதாரணங்களுடன் விளக்கப்பட்டுள்ளது.

ஹிப்ல் செய்யாவிட்டால்
உம்றா செய்யாவிட்டால்
யாரும் நரகம் செல்வதுமில்லை
அதனால் மார்க்கத்துக்கு எந்த பாதிப்புமில்லை

ஆனால் ஒருவன் ஷிஆவாகவோ காதியானியாகவோ மாறினால்
அது அவனை நரகவாதியாக்கும்
அவன் மார்க்கத்தின் எதிரியாக மாறி
மார்க்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தும்.

Post a comment