Header Ads



எட்டரை கோடி ரூபா செலவில், முஸ்லிம்களுக்கு பேரீத்தம்பழங்கள் வழங்கப்பட்டுள்ளது

சவுதி அரேபியா அரசாங்கம்  இலங்கை முஸ்லிம்களுக்காக வருடா வருடம் வழங்கிவரும் பேரீத்தமபளம் இம் முறை தாமதமாகியதன் காரணமாக அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் கௌரவ பிரதமரின் உதவியுடன் எட்டரை கோடி ரூபா செலவில் 250 மெட்ரிக் டொன் பேரீத்தம்பழங்கள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தபால் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.

கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேலும்  இவ்வாறும் தெரிவித்தார்.

சவுதி அரேபியா அரசாங்கம் வருடா வருடம் இலங்கை முஸ்லிம்களுக்காக பேரீத்தம் பழங்கள் வழங்குவது வளக்கம். இருந்த போதும் இம் முறை அது தாமதித்துள்ளது. எனவே முஸ்லிம் சமய விவகார அமைச்சர் என்ற அடிப்படையில் நான் அமைச்சரவைக்கு சமர்பித்த வேண்டுகளின்  பிரகாரம் பிரதமரின் உதவியுடன் எட்டரை கோடி  ரூபாய் செலவில் 250 மெட்ரிட் டொன் பேரீத்தம் பழங்களை  சதொச மூலம் பெற்றுக்கொள்ள முடிந்த்து.
தறபோது கிடைத்துள்ள செய்தியின் படி சவுதி அரேபிய அரசு வழங்கும் பேரீத்தம் பழத்தெகையும் செவ்வாயகிழமை ஆகும் போது கிடைக்க உள்ளது. அத்தொகை  கிடைத்த பின் மேலும் சில பகுதிகளுக்கு வழங்கவும் சீரற்ற கால நிலையால் பாதிக்கப்பட்டு அகதிகலாகியுள்ளவர்களுக்கு ஒரு தொகையை  வழங்கவும் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அமைச்சர் ஹலீம்  இங்கு  தெரிவித்தார்.

ஆஸிக்

1 comment:

  1. அவ்வளவு பழத்தையும் யாருக்கு கொடுத்தீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.