Header Ads



14 லட்சம் மாணவர்கள், காலை உணவின்றி பாடசாலைக்கு சமுகம், ஏற்படும் பயங்கர விளைவுகளும்

நாட்டில் உள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களில் 14 லட்சம் மாணவர்கள் காலை உணவை உட்கொள்ளாமல் பாடசாலைகளுக்கு சமுகமளிப்பதாக இலங்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. போஷாக்குணவு தொடர்பான பிரிவின் தலைவி டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

காலை உணவை மாணவர்கள் உட்கொள்ளாமை காரணமாக மாணவர்களுக்கு நுண்ணறிவுத் திறன், ஞாபக சக்தி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான திறன் என்பன குறைந்து காணப்படுவதாகவும் இதனால் மாணவர்கள் போட்டிப் பரீட்சைகளில் மதிப்பெண்களை குறைவாக பெறல், உயரம் குறைந்து காணப்படுதல் போன்ற பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் இவர் தெரிவித்துள்ளார்.

"பெற்றோர் காலையில் பிள்ளைகளுக்கு ஒரு கோப்பை பாலை மட்டும் அருந்தக் கொடுக்கின்றனர். ஆனால் காலை உணவு குறைந்தது மூன்று உணவுப் பொருட்களை கொண்டதாக இருத்தல் வேண்டும். குறிப்பாக தானியம், மரக்கறி, பழம், கடலுணவுகள் கொண்டதாக காலை உணவு இருத்தல் அவசியம்" என என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாடசாலைகளில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுகின்ற போதிலும் அவை நிறையுணவாக அமைவதில்லையெனவும், உள்நாட்டு உணவுப் பொருட்களை பாடசாலை நிருவாகங்கள் வழங்குவதில்லை எனவும், கோதுமை பண்டங்கள் மற்றும் உணவு வகைகளும் வழங்கப்படுவதால் இவை மாணவர்களின் மூளை வளர்ச்சியை பாதிப்பதாகவும் டாக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 10,162 பாடசாலைகளில் 43லட்சம் மாணவர்கள் கல்வி பயில்கின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது 6984 பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி அமைச்சு காலை உணவை இலவசமாக வழங்கி வருகிறது.

1 comment:

  1. அப்படி தான் நாங்களும் சின்ன வயதில் ஒழுங்கா ஆடையின்றி ,காலை சாப்பாடின்றி பாடசாலைக்கு சென்று கற்றோம் நாங்கள் அல்லாஹ்வின் உதவியை கொண்று அல்ஹாம்துரில்லா இப்ப நல்ல இருக்கின்றோம்.சில விடயங்களில் பொறுமையும் சாஹிப்பும் தேவை அதன் மூலம் தான் வாழ்க்கைக்கு நல்ல முறையில் முன்னுக்கு வரலாம்.

    ReplyDelete

Powered by Blogger.