Header Ads



அரபுக் கல்லூரிகள் வக்பு சபையில், பதிவு செயப்படுவது அவசியமாகும்

(நவமணி பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கம்)

நாட்டின் அரபுக் கல்லூரிகளை வக்பு சபையின் கீழ் பதிவு செவதன் அவசியத்தை வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். யாஸின் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் 280 அரபுக் கல்லூரிகள் இருக்கின்றன. இக்கல்லூரிகள் எதுவும் வக்பு சபையின் கீழ் பதிவு செயப்படவில்லை என வக்பு சபையின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வக்பு சபையின் கீழ் இவை பதிவு செயப்படாத போது இந்த அரபுக் கல்லூரிகளின் நிதிக் கொடுக்கல் வாங்கல்களை பரிசீலிப்பதில் சிக்கல்கள் உள்ளன.

இவ்வாறு பதிவு செவதன் மூலம் அரபுக் கல்லூரிகளுக்குரிய சொத்துக்கள் வக்புச் சொத்துக்களாக மாறுகின்றன. அதன்மூலம் சோத்துக்களுக்கு பாதுகாப்பு கிடைக்கின்றன.

சில அரபுக் கல்லூரிகளின் நிதி கையாளுதல் தொடர்பாக விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது. அரபுக் கல்லூரிகளது நற்பெயருக்கு இது களங்கத்தை ஏற்படுத்தலாம்.

அரபுக் கல்லூரிக்கு வசதிபடைத்தவர்கள் நிதி உதவிகளை வழங்குவது தூய நோக்கத்துடனாகும். இந்த தூய நோக்கம் சிலரது தகாத செயற்பாடுகளால் மாசுபடுத்தப்படுகிறது.

அரபுக் கல்லூரிகள் எவ்வித கண்காணிப்பும் இன்றி இயங்கி வருவதாக நாட்டின் உயர் மட்டத்திலுள்ளோர் சிலர் அண்மையில் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சு கூடுதலான கரிசனை காட்டுவது அவசியமாகும்.

அவ்வாறு கூறுவதற்கு காரணம் என்ன என்று  தேடிப்பார்ப்பது நல்லது. இந்த விடயத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சின் ஈடுபாடு போதுமானதாக இல்லை என்றே கூறப்படுகின்றது.

வக்பு சபையின் கீழ் அரபுக் கல்லூரிகளுக்காக புறம்பான அலகு ஒன்றை உருவாக்கி அவை மேற்பார்வை செயப்படுவதன் மூலம் இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்படுவதனைத் தவிர்க்கலாம்.

இப்போது நாட்டில் தகவல் அறியும் சட்டம் அமுலிலுள்ளது. இச்சட்டத்தின் மூலம் இக்கல்லூரிகள் பற்றி எவரும் கேள்வி எழுப்பும் நிலையும் ஏற்படலாம்.
எனவே, அரபுக் கல்லூரிகளது செயற்பாடுகள் குறித்து பகிரங்கத் தன்மை பேணப்படுவது அவசியமாகும்.

ஒரு சில அரபுக் கல்லூரிகளது செயற்பாட்டினால் நாட்டில் இயங்கும் சகல அரபுக் கல்லூரிகளுக்கும் அவப்பெயர் ஏற்பட இடமுண்டு. இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்தின் ஆத்மீக வளர்ச்சிக்கும் அரபுக் கல்லூரிகள் அளப்பரிய பங்களிப்புச் செதுள்ளன. செது வருகின்றன.

இப்போது நாட்டில் நிலவும் நல்ல சூழல் என்றும் இருக்கும் என்று கூற முடியாது. எனவே, வக்பு

சபைத் தலைவர் கூறியிருப்பது போன்று சகல  அரபுக் கல்லூரிகளும் வக்பு சபையின் கீழ் பதிவு செவதற்கு முஸ்லிம் சமய விவகார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விடயத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சுக்கு பாரிய பொறுப்புள்ளது என்பதனை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

1 comment:

  1. வக்பு சொத்துக்கள் அனைத்தும் ஒரு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வருவதன் மூலம் பணம் படைத்த பள்ளிவாயல்களில் நிர்வாக தெரிவின் போது ஏட்படக்கூடிய சண்டையும் ,குழப்பங்களில் இருந்தும் பள்ளிவாயல்களை பாதுகாக்க முடியும் .

    ReplyDelete

Powered by Blogger.