Header Ads



சக வீரர்களின் ஆதரவு, எனக்கு கிடைக்கவில்லை - தில்ஷானின் கடந்தகால, கசப்பான அனுபவங்கள்..!

இலங்கை அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட போது சக வீரர்களின் ஆதரவு தனக்கு கிடைக்கவில்லை என்று தில்ஷன் கூறியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னணி தொடக்க பேட்ஸ்மேன் ஆன திலகரத்னே தில்ஷன் நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

போட்டிக்குப்பின் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது தான் கேப்டனாக இருந்த காலத்தில் சக வீரர்கள் ஆதரவு அளிக்கவில்லை என்றார்.

இதுகுறித்து தில்ஷன் மேலும் கூறுகையில், 

‘‘2011-ம் ஆண்டு இலங்கை அணியின் கேப்டன் பதவி எனது கைக்கு வந்தபோது, தற்போது விளையாடாத முன்னாள் கேப்டன்கள் இருவர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர், நீண்ட சமாதானத்திற்குப் பின் ஒருவர் சம்மதம் தெரிவித்தார் (அவர் குமார் சங்ககராவா அல்லது ஜெயவர்தனாவா என்று தில்ஷன் தெளிவாக கூறவில்லை).

நியூசிலாந்து அணிக்கெதிரான 3-வது போட்டியின்போது காயம் காரணமாக நான் இடம்பெறவில்லை. அப்போது குமார் சங்ககரா கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும், நான் கேப்டனாக இருக்கும்போது காயத்தை காரணம் காட்டி மேத்யூஸ் பந்து வீச மறுத்தார். ஆனால், நான் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டபின், உடனடியாக பந்து வீசினார். இதனால் நான் ஆச்சர்யம் அடைந்தேன்.

கேப்டன் பதவியில் இருந்து தூக்கியபோது வருத்தம் இருந்தது. ஆனால், எனது தனிப்பட்ட ஆட்டத்தை அது எந்த வகையிலும் பாதிக்கவில்லை’’ என்றார்.

9 comments:

  1. Your life is miserable, changed your real name from Tuan Mohamed Dilshan to Thilakaratne Dilshan just for the sake of game. Married to a movie actress, and now you are no where.

    ReplyDelete
    Replies
    1. He converted into Buththism Its Not because of game, It's because this parents divorce at age 16.

      Delete
  2. To play cricket, Dilshan changed his religion/name, instead of trusting his ability/skill.

    Now he is attacking current captain.

    ReplyDelete
  3. You deserved for same. You just a average player. True Leader are born, not made, I didn’t find any quality what you can lead our team.

    ReplyDelete
  4. Wasim Thajudeen , a rugger captain ,was killed .
    Mohamed Shyam a businessman was killed By a DIG
    and his son.S W R D and R Premadasa were killed
    in politics . Lakshman Kadigamar was killed and
    there was speculation , he might become Prime
    Minister .No Limit Panadura outlet was set ablaze
    to ashes . These are just a few high profile
    examples of a country where time to time,depending
    on who runs the country , hatred in many forms raises
    its head to the peak with irreparable damage to the
    victims ,irrespective of race or religion. Mohamed
    Tuwan becomes Tilakaratne Mudiyanselage to apparently
    escape this merciless culture of hatred and eventually
    he is forced to admit that he learned the bitter truth.
    THIS IS SRILANKA.

    ReplyDelete
  5. May be because you are a Thambia from their point of view. If you are a non-Muslim and you turn Muslim, no matter whatever you do in your life, straight to heaven...

    ReplyDelete
  6. He is not the only cricketer changed religion for the game, former Pakistani cricketer Yousuf Youhana also changed the name (Mohammed Youhana) and religion and then only got the captain post. This is the way that third world countries run the sports.

    ReplyDelete
    Replies
    1. Kugan you don't have much cricket knowledge.
      Azaruddin captained India, did he change the name ?
      Dinesh Kaneria played for Pakistan. Did he change the name ?
      Zaheer Khan, Mohamed kaif , Yousuf , Irfan Pathan played for India without changing the religion or name.
      In Sri Lanka every one knows , SSC ( Sinhalese sports club) gets the priority. Dilshan changed the name and religion before the captaincy.

      Delete
  7. Yes, he becomes more reclusive and in sha Allah, no one would care about him hereafter. Allah has given momentary pleasure and joy to the humankind in this world. Dilshan is an example.

    ReplyDelete

Powered by Blogger.