Header Ads



பிட்டும் தேங்காய்ப்பூவும் என முழக்கமிடுவார்கள், மீளக்குடியேற செல்கின்றபோது விரட்டியடிக்கிறார்கள்

முஸ்லிம்களின் அரசியல் அபிலாஷைகளும் நலன்களும் கருத்தில் எடுக்கப்படாத எந்தத் தீர்வு முயற்சிகளும் நடைமுறைச் சாத்தியமற்றதென்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

கொழும்பில் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்றில் உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது-

சுமார் மூன்று தசாப்தகாலமாக இந்த நாட்டை ஆட்டிப்படைத்த யுத்தத்தின் கோரப்பிடிக்குள் தமிழ் மக்கள் மட்டும் சிக்கித்; தவிக்கவில்லை, வடக்கு, கிழக்கில் வாழ்ந்த முஸ்லிம் சமூகமும் இந்த யுத்தத்தினால் அதேயளவு பாதிப்பையும், துன்பத்தையும் சந்தித்தது.

உயிர்களை காவுகொடுத்தோம், உடமைகளை இழந்தோம் எல்லாவற்றிற்கும் மேலாக வடபுல முஸ்லிம்கள் தமது சொந்த தாயகத்திலிருந்து உடுத்த உடையுடன் விரட்டப்பட்டனர். தேர்தல் காலங்களில் மட்டும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றி கூப்பாடுபோடும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இவ்விரண்டு இனங்களின் சமூக ஒற்றமைக்கு காத்திரமான எந்த பணிகளையும் ஆற்றவில்லை. மேடைகளிலும், அறிக்கைகளிலும் பிட்டும் தேங்காய்ப்பூவும் போல என்று முழக்கமிடுவார்கள். ஆனால் நடைமுறைவாழ்வில் அவர்கள் அந்த நல்லெண்ணத்தை என்றுமே வெளிப்படுத்தியதில்லை. சமாதான காலத்தில் முஸ்லிம்கள் மீளக்குடியேற சென்றபோது எம்மை மறைமுகமாக விரட்டியடித்தார்கள்.

போர் முடிந்து அமைதியான சூழல் ஏற்பட்ட பின்னர் முஸ்லிம்கள் தமது பிரதேசத்தில் மீள்குடியேற சென்றபோது அவர்கள் பல்வேறு தடைகளையும் முட்டுக்கட்டைகளையும் போடுகிறார்கள். தமிழ் கூட்டமைப்பின் அடிமட்ட உறுப்பினர்களில் பெரும்பாலனோரும் உயர்மட்ட ஒரு சில உறுப்பினர்களும் அப்பாவி தமிழ் மக்களை தூண்டிவிட்டு எம்மை மீள்குடியேற விடாமல் தடைபண்ணுகிறார்கள். எமது சொந்தக் காணியில் 25 வருடங்களாக வளர்ந்துள்ள காடுகளை நாம் வெட்டி துப்பரவாக்கும் பணியில் ஈடுபடுகின்றபோது அதனை ஆக்கிரமிப்பென்றும் அத்துமீறல் என்றும் வெளியுலகத்திற்கு
கூறித்திரிகிறார்கள். தங்களுக்கு வசதியான தனியார் ஊடகங்களை வரவழைத்து மக்களை தயார்படுத்தி பேட்டிகளையும், கருத்துக்களையும் வழங்கி எம்மை அன்னியர்களாக காட்ட முயல்கின்றனர். ஜெனிவாவிலோ அல்லது சர்வதேச நாடுகளிலோ முஸ்லிம் மக்களுக்கும் பிரச்சினைகள் உண்டு அவற்றை தீர்த்து வைக்க வேண்டும் என்று அவர்கள் என்றுமே சுட்டிக்காட்டியதில்லை. திம்பு பேச்சுவார்த்தையிலும் சரி இலங்கை இந்திய ஒப்பந்தத்திலும் சரி முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷைகள் கருத்தில் எடுக்கப்படவில்லை. கடந்த காலங்களில் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் வெளிநாடுகளில் பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றபோதெல்லாம் முஸ்லிம் சமூகம் மூன்றாம் தரப்பாக- சமதரப்பாக – தனித்தரப்பாக பங்குபற்ற வேண்டும் என்று அந்த சமூகத்தின் தலைவர்கள் குரல் எழுப்பியபோதெல்லாம் புலிகளும் தமிழர்களின் பிரதிநிதிகளும் அதற்கு தடைபோட்டதே வரலாறு.

சுமார் இரண்டரை வருட காலம் வடமாகாண சபையை ஆட்சி செய்து வரும் தமிழ் கூட்டமைப்பு தமது சகோதர இனம் தென்னிலங்கை அகதி முகாம்களில் இன்னும் அவல வாழ்வு வாழ்வது பற்றி எந்த கரிசனையும் கொள்ளவில்லை. அவர்கள் தமது தாயகத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டியவர்கள் என்று ஒரு வார்த்தைதானும் பேசவில்லை. மாறாக புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வருகின்றார்கள், மாணவர்கள் பரீட்சை எழுதுகின்றார்கள், வடக்கிற்கு வந்து தொழில் செய்கின்றார்கள் என்று ஓலமிடும் மாகாண சபை உறுப்பினர்களையே நாம் காண்கின்றோம்.

மஹிந்தவின் ஆட்சி முடிவிற்கு கொண்டுவரப்பட்டு மைத்திரி-ரணிலின் புதிய ஆட்சி உருவாக்கத்திற்கு எமது முஸ்லிம் மக்கள் ஆற்றிய பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவராகிய நான் உயிரையும் துச்சமாக மதித்து அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாது மஹிந்த அரசிலிருந்து வெளியேறினேன். எனது பாதுகாப்புக்கள் உடனடியாக குறைக்கப்பட்டிருந்த நிலையிலும் நாடளாவிய ரீதியில் இரவு பகலாக பிரச்சாரங்களில் ஈடுபட்டேன். எனினும் புதிய ஆட்சி மலர்வதற்கு முஸ்லிம்கள் பங்களிப்பை வழங்கவில்லை என்ற பாணியில் சிலரின் கருத்துக்கள் அமைந்துள்ளன.

தமிழ் மக்களின் பிரச்சினைகளை நாம் அறிவோம் ஏனென்றால் அவர்களுடன் நாம் ஒன்றித்து வாழ்ந்தவர்கள் இப்போதும் வாழத்துடிக்கின்றவர்கள் சர்வதேச நாடுகளின் ராஜதந்திரிகள் இலங்கைக்கு வரும்போதெல்லாம் அவர்களை சந்திக்கும் சந்தர்ப்பங்கள் எமக்கு கிட்டும்போது முஸ்லிம்களின் பிரச்சினைகளுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளையும் நான் எடுத்துரைப்பது வழக்கம். நுனி நாக்கில் ஒன்றும் அடிநாக்கில் ஒன்றும் வைத்து நாம் என்றுமே பேசியதில்லை. ஆனால் தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இலங்கையிலும் முஸ்லிம்கள் வாழ்கின்றார்கள் அவர்களுக்கும் இன்னோரன்ன பிரச்சினைகள் உண்டு என்று எப்போதாவது இடித்துரைத்துள்ளனரா? இதய சுத்தியுடன் அவர்கள் எமது பிரச்சினைகளை என்றுமே தொட்டுக்காட்டியதில்லை. சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என நான் உட்பட முஸ்லிம் தலைவர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றோம். நான் இதனை இரட்டை நாக்குடன் பேசுவதில்லை. முள்ளிவாய்க்காலில் கடும் யுத்தம் நடைபெற்றபோது உயிருக்கு தப்பி பிழைத்து ஓடிவந்த தமிழ் மக்களை ஓமந்தை சென்று வரவழைத்து அவர்களை வவுனியாவிலும் மன்னாரிலும் தங்க வைத்தேன். அவர்களுக்கு முடிந்தளவு வசதிகளை செய்து கொடுத்தேன். மீள்குடியேற்ற அமைச்சராக நான் இருந்த காலத்தில் தமிழ் அகதிகளுக்கு என்னால் முடிந்தவரை உதவியளித்துள்ளேன். புலிகளால் 1990ம் ஆண்டு விரட்டப்பட்ட முஸ்லிம் அகதிகளில் நானும் ஒருவன் நடு நிசியிலே கடல் மார்க்கமாகவும் தரைமார்;க்கமாகவும் எமது மக்கள் வந்த கஷ்டங்களை நாங்கள் உணர்வோம் எனவே எமது சகோதர தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது அந்த அவஸ்த்தையை நாங்கள் உணர்ந்தோம் இப்போதும் உணர்கின்றோம்.

முஸ்லிம்கள் வெளியேறி தென்னிலங்கை வந்தபோது இங்குள்ள முஸ்லிம்கள் எமக்கு பல்வேறு உதவிகளை செய்து எம்மை வாழ வைத்தார்கள். அதேபோன்று நாம் சொந்த பிரதேசத்தில் மீள்குடியேறுவதற்கு தென்னிலங்கை முஸ்லிம்களின் ஒத்துழைப்பும் உத்வேகமும் எமக்கு வேண்டும் என நாம் விரும்புகிறோம்.

6 comments:

  1. அமைச்சரே அறிந்துகொள்ளுங்கள் குட்ட குட்ட நாம் குனிவதால் தான் எம் மேலே ஏறி பயணம் செய்ய இந்த இரண்டு பேரினவாத சக்திகளும் முயற்சிகின்றன. முஸ்லிம்களின் உரிமையை முஸ்லிம்கள் தான் போராடி பெற வேண்டும் எமக்கு உதவிக்கு யாரும் வர போவது கிடையாது. மஹிந்த ஒழிந்திட்டான் இனி நிம்மதி தானாக வந்து விடும் என்கிற நிலையில் அப்பாவிகளாக உறங்கிகொண்டிருக்கின்றது இஸ்லாமிய சமுதாயம். இரு பேரினவாதிகளாலும் இன்று மறைமுகமாக எமக்காக தீட்டப்படும் திட்டங்களை எதிர்கொள்ள ஜனநாயக வழி போராட்ட குணத்தை வலுபடுத்த வேண்டிய அவசர தேவையுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள முஸ்லிம்களே இதற்கு உதாரணம். உங்கள் தலைமைகளை கொண்டு முஸ்லிம்களை விழிக்க செய்யுங்கள். விழித்துகொள்வோம்

    ReplyDelete
  2. பிட்டும் தேங்காயும் என்று சொல்வது தவறு கீரியும் பாம்பும் என்று சொல்வதுதான் சரி

    ReplyDelete
  3. Srilankan tamils are the fearsome racists in the world same as zionist.never ever beleive or trust them.this is talled as per most people
    Experiences.

    ReplyDelete
  4. அமைச்சர் ரிசாத் அவர்களே,
    தமிழ் இனவாத அரசியல் சாக்கடைகள் எதிர்ப்பு (குரைப்பு) அரசியல் செய்து கொண்டிருந்த காலப்பகுதியில் உண்மையான உளத்தூய்மையோடு தமிழ்மக்களின் மீள்குடியேற்றத்தை செய்து கொடுத்த உங்களுக்கே, அந்த "நன்றி மறவா" இனத்தின் இனவெறித்தலைமைகளும், அதன் சார்புக்கொள்கையுள்ள காடையர்களும் உங்கள் சமூகத்தை குடியேற விடாமல் தடுப்பது மிகவும் வேதனையானது! உங்கள் ஆதங்கம் அதனையே வெளிப்படுத்துகிறது. நீங்கள் ஒன்றை புரிந்துகொள்ளவில்லை என்பதையே இது புலப்படுத்துகிறது... அதாவது "அவர்கள் அப்படித்தான்" என்பதை. அவர்கள் எப்போதும் முஸ்லிம்களை சொல்லில் "பிட்டும் தேங்காயும்தான்".... ஆனால், செயலிலோ "கறிவேப்பிலை"களாகவும் "மெழுகுவர்த்தி"களாகவுமே பயன்படுத்துவார்கள். இது அவர்களது காலாகால அணுகுமுறை!
    "நயவஞ்சகமும்" "பொறாமையுமே" அவர்களது மூலதனம். (ஓரிரண்டு பேர் விதிவிலக்கானவர்கள்... உதாரணமாக "சுமேந்திரனை" குறிப்பிடலாம்.

    ஆனால், நமது அரசியல்வாதிகளிடமிருந்தோ ஆர்ப்பாட்டம் செய்து,செய்து பிடுங்கி எடுத்து விடுவார்கள். நாமும் நடுநிலையாக நடப்பவர்கள் என்பதால் அவர்களுக்குரியத்தை கொடுத்தே நாமும் எடுக்கின்றோம். (அண்மையில் அமைச்சரவை அமைத்தபின் கிழக்கின் பல முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் பிரதேசங்களில் இருந்தே தங்கள் அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்தார். உதாரணமாக அமீரலி, ஹரீஸ், ஹிஸ்புல்லாஹ், போன்றோர். அமீரலி தனது மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளராக தமிழர் ஒருவரையே நியமித்துள்ளார். கிழக்கு முதலமைச்சரும் அதையே செய்கிறார்.). எந்தவொரு தமிழ் அரசியல்வாதியாவது முஸ்லிம் பிரதேசங்களுக்கு ஏதாவது செய்த வரலாறு உண்டா?



    ReplyDelete
  5. பெரும்பாண்மையினர் அடித்தால் விளங்கும் அவர்கள் அடிக்கிறார்கள் என்று இவர்கள் அடித்தால் அடிபட்டு பலகாலம் செல்லும் வரை இவர்கள் அடித்ததே தெரியாது பக்குவமாவ புட்டு தேங்காய் என்று சொல்லிக் கோண்டே அடிவிழுட் அதிலும் சில மடையர்கள் அவர்கள் அரயிலுகக்hக மற்றும் சர்வதேசத்தை நம்பவைக்கச் சொல்லும் சில வார்த்தைகளை நம்பி ஏமதறுகின்றனர் பாவம் அப்பவாவி முஸ்லிம்கள்

    ReplyDelete
  6. பெரும்பாண்மையினர் அடித்தால் விளங்கும் அவர்கள் அடிக்கிறார்கள் என்று இவர்கள் அடித்தால் அடிபட்டு பலகாலம் செல்லும் வரை இவர்கள் அடித்ததே தெரியாது பக்குவமாவ புட்டு தேங்காய் என்று சொல்லிக் கோண்டே அடிவிழுட் அதிலும் சில மடையர்கள் அவர்கள் அரயிலுகக்hக மற்றும் சர்வதேசத்தை நம்பவைக்கச் சொல்லும் சில வார்த்தைகளை நம்பி ஏமதறுகின்றனர் பாவம் அப்பவாவி முஸ்லிம்கள்

    ReplyDelete

Powered by Blogger.