Header Ads



'முஸ்லிம் சமூகத்தின் பக்தர்கள் என, நீலிக் கண்ணீர் வடிப்பவர்களை ஆதரிக்க மக்கள் தயாரில்லை'

இம்முறை நிச்சயம் மூன்று உறுப்பினர்களை நாங்கள் கைப்பற்றுவோம். யார் யாரை  மக்களை ஏமாற்றுக்கின்றார்கள் என்று கொழும்பு மக்களுக்கு நன்கு தெரியும். முஸ்லிம் காங்கிரஸ்தான் முஸ்லிம் சமூகத்தினுடைய ஏகப்பிரதிநிதி. முஸ்லிம்களைப் பாதுகாத்துக் கொண்டு செயற்படுகிறது. காலத்திற்கு காலம் அரசின் எலும்புத் துண்டுகளுக்காய் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து உழைப்பு நடத்தும் கட்சியல்ல. மாறாக முஸ்லிம்களுடைய உன்னதமான அரசியல் போராட்டத்தை வழிநடத்தக் கூடிய கட்சி என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் கொழும்பு மாவட்ட முதன்மை வேட்பாளர் அப்துல் ஹை  தெரிவித்தார்

கொழும்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இலக்கம் 9 இலக்கத்தில் போட்டியிட்ட அப்துல் ஹையை  ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அப்துல் ஹை இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்,

முஸ்லிம் சமூகத்தின் பக்தர் என நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டு வெறுமனே குறுகிய அரசியல் கோஷங்களுக்காக வீதிகளில் இறங்கி நிற்பவர்களை மக்கள் ஆதரிக்கத் தயாரில்லை. ஒட்டு மொத்த எல்லா மக்களுடைய கலந்தாலோசனையின் படி ஆக்கபூர்வமான  மசூறா அடிப்படையில் செயற்படக் கூடிய கட்சி இது. இதில் போட்டியிடக் கூடியவர்கள்  தோல்வி அடையப் போவதில்லை. 

முஸ்லிம்களுடைய சமகாலப் பிரச்சினைகள்  தொடர்பாக எங்கள் கட்சி மிக நித்தானத்துடன் கையாண்டுள்ளது. இந்நாட்டில் எங்களுடைய பிரச்சினை தொடாபாக உயர் மட்டங்களில் எத்தி வைக்கப்பட்டன. ஆனால் எந்தவிதமான பாதுகாப்பு உத்தரவாதங்களும் எங்களுக்கு கிடைக்கவில்லை. எங்கு எங்களுடைய பிரச்சினைகள் பற்றி எங்கு முறையிட முடியுமோ அதனைத்தான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளது. இதனை அவர்களால் ஏன் செய்ய முடியாது.  சமூக நலனில் அக்கறையற்றவர்கள் இந்த துணிகரமான காரியங்களை செய்ய முன்வரமாட்டார்கள் என்பதுதான் உண்மை. இவர்கள் முஸ்லிம் சமூகத்தை வைத்து குறைந்த முதலீட்டில் நிறைந்த இலாபம் தேடும் வியாபாரிகளாக மாறிவிட்டார்கள். முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் விடியலுக்காய் குரல் கொடுக்கின்ற கட்சி. எந்த இடத்தில்; முஸ்லிம் சமூகத்தின் விடுதலைக்காய்  குரல் உயர்த்திப்  பேசப்பட வேண்டுமோ அந்த இடத்திற்கு அனுப்பி முஸ்லிம்களுடைய பாதுகாப்புத் தொடர்பாக இந்த கட்சி எடுத்த துணிகரச் செயலை இந்த காட்டிக் கொடுத்த கட்சிகாரர்களும் விமர்சனம் செய்து கொண்டிருக்கின்றனர். இவர்களா முஸ்லிம்களுடைய விமோசனத்திற்காக அரசியல் போராட்டம் நடத்துபவர்கள்.

நாங்கள் இந்த முறை கொழும்பு மாவட்டத்தில் மூன்று ஆசனங்களைப் பெற்றுக் கொள்வோம் என்பதில் எவ்வித சந்கேமுமில்லை. அரசின் பக்கம் இருந்து சில முஸ்லிம் அமைச்சர்கள் தங்களுடைய வங்குரோத்துத் தனத்தை மறைப்பதற்காக குரோத மனப்பான்மையுடன் எங்களைக் காட்டிக் கொடுத்து அழிப்பதற்காய் பாரிய சதித்திட்டங்களையெல்லாம் செய்து கொண்டிருக்கின்றார்கள். யார் அழிக்க முற்பட்டாலும் அல்லாஹ்   எங்கள் கட்சியைப் பாதுகாப்பான் என்பது உறுதி. ஒரு வருடத்திற்கு ஒரு கட்சி பெயரை வைத்து அரசியல் நடாகம் நடத்துவது ஒரு போதும் நிலைக்காது.

சமூக உணர்வு மிக்க முஸ்லிம் மக்கள் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கே வாக்களிக்கவுள்ளனர். எங்கள் ஐக்கியம் எங்கள் பலம். நாங்கள் ஒன்று பட்டு எங்ளுடைய முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்து அதிகப்டிபயான அரசியல் பிரதிநிதி அரசாங்கத்துக்கு எடுத்துக் காட்டி எங்கள் பலத்தை  நாங்கள் நிரூப்போம். எனவே முதன்மை வேட்பாளர் என்ற வகையில் என்னுடைய இலக்கத்திற்கு புள்ளடியையிட்டு என்னையும் வெற்றிபெற ஆனவ செய்யுமாறு கேட்டக் கொள்கின்றேன்.

1 comment:

Powered by Blogger.