கெலிஓயா, கலுகமுவ முஸ்லிம் மாணவனின் கண்டுபிடிப்பு (படங்கள்)
(எம்.எம்.எம். ரம்ஸீன்)
கெலிஓயா கலுகமுவ முஸ்லிம் மத்திய கல்லூரி தரம் 12 மாணவன் எம்.எம்.எம். முஸ்னி மத்திய மாகாண பாடசாலை மாணவர்களுக்கிடையில் நடாத்தப்பட்ட புத்தாக்கப் போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார்.
மார்கர் பேனைக்குத் தேவையான மையை பேனையில் சேமித்து வைக்கும் சேமிப்பானை பேனையில் பொருத்தும் முறைமையைக் கண்டு பிடித்ததன் மூலம் இவர் இப்போட்டியில் மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார். இப்புத்தாக்கப் போட்டியும் கண்காட்சியும் கண்டி டி.எஸ். சேனாநாயக்க மகா வித்தியாலயத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment