அக்கரைப்பற்றுப் பாடசாலை ஒன்றில் அரியவகை மூலிகைத் தோட்டம் (படங்கள்)
(அனாசமி)
அக்ரைப்பற்று கல்விப் பிரதேசத்திலுள்ள பிள்ளைநேயப் பாடசாலையான அக்கரைப்பற்று காதிரியா வித்தியாலயத்தில் வித்தியாசமான முறையில் மிகஅரிய வகை மூலிகைத் தோட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
அதிபர், ஆசிரியர்கள், பாடசாலைச் சமூகம் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்டுள்ள இந்த மூலிகைச் செடிகளைப் பார்வையிட பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் என பலதரப்பட்டவர்களும் தினமும் வருகை தந்து பார்வையிட்டுச் செல்வதாக அதிபர் எம்.எச்.எம். பரீட் தெரிவித்தார்.
அந்தவகையில் அண்மையில் அட்டாளைச்சேனை அல்முனீறா பெண்கள் உயர் பாடசாலையின் அதிபர் தலைமையில் ஆசிரியர்கள், பெற்றோர் குழுவொன்று விஜயம் செய்து காதிரியா வித்தியாலயத்தின் வகுப்பறைச் செயற்பாடுகள், வகுப்பறைக் கற்றலின்போது உபகரணப் பயன்பாடு, அரிய வகை மூலிகைத் தோட்டம், அதன் பயன்பாடுகள் போன்றவற்றையும் பார்வையிட்டனர். அதன் போது அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ஏ. அபுதாஹிரும் கலந்து கொண்டு வருகைதந்திருந்த அதிதிகளுக்கு விளக்கமளிப்பதையும் படங்களில் காணலாம்.




Post a Comment