Header Ads



பிரதமர் ஜயரட்ன விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

உலக வாழ் முஸ்லிம்கள் இறைவனுக்கு நன்றி கூறுமுகமாகக் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு ஆசிச் செய்தியினை வெளியிடு வதில் பெரு மகிழ்ச்சியடைகின் றேனென பிரதமர் தி. மு. ஜயரட்ன விடுத்துள்ள ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது :-

உலக வாழ் அனைத்து இஸ்லாம் பக்தர்களும் சமய மற்றும் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் பக்தியுடன் வருடாந்தம் மேற்கொள்ளும் ஹஜ் யாத்திரிகையானது முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி உலக வாழ் அனைத்து மக்களுக்கும் முன்மாதிரியாகுமென நான் நம்புகிறேன். நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் பெளதீக ரீதியாக நாம் துரித அபிவிருத்தியை அடைந்து கொண்டாலும் அவை அனைத்தையும் விட மனிதாபிமான குணப் பண்புகளை விருத்தி செய்யுமாறு இஸ்லாம் வலியுறுத்துவதனை நாம் அனைவரும் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான எமது அரசாங்கம் முன்னெடுக்கும் ஆன்மீக விருத்தி வேலைத் திட்டத்துக்கு இந்நாட்டு முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பினை வழங்கியுள்ளதனை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். இஸ்லாமிய போதனைகளைப் பின்பற்றி முஸ்லிம்கள் தமது சகோதர மக்களுடன் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ்கின்றனர். அது உலகில் வாழும் ஏனைய அனைத்து இனத்தவர்களுக்கும் சிறந்த முன்மா திரியாகும். 

இன, மத, குல, கட்சி, நிற பேதங்களை புறந்தள்ளிவிட்டு நாம் அனைவரும் இலங்கையர் எனக் கருதி செயற்பட முன்வர வேண்டும்.

உலக வாழ் முஸ்லிம்கள் பக்தியுடன் கொண்டாடும் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் அனைத்து இலங்கையர்களது உள்ளங்களையும் அன்பு, தயாளத் தன்மை கொண்ட பலமிக்க உள்ளங்களாக மாற்ற வேண்டும் என அல்லாஹ்த ஆலாவிடம் பிரார்த்திப்போமாக! இவ்வாறு பிரதமர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.