யாழ் - ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் ஹஜ் பெருநாள் தொழுகை
ஈதுல் அல்ஹா ஹஜ் பெருநாள் தொழுகை இம்முறையும் யாழ் ஒஸ்மானியாக் கல்லூரி ஜின்னா மைதானத்தில் நடைபெறவுள்ளது என அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா யாழ் கிளிநொச்சி மாவட்ட கிளை தலைவர் ஏ.எம் அப்துல் அஸீஸ் தெரிவித்துள்ளார்.
16-10-2013 காலை 6.30 மணியளவில் இடம்பெறும் தொழுகை ஏற்பாட்டை உலமா சபையுடன் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் இணைந்து முன்னெடுத்ததாக தெரிவித்தார்.
எனவே குறித்த நேரத்திற்கு தொழும் இடத்திற்கு வருகை தருமாறு கேட்டுக்கொண்டுள்ளார.

Post a Comment