களனி பல்கலைக்கழக தமிழ், முஸ்லிம் மாணவர்களின் கவலை
களனி பல்கலைக்கழகத்தில் சமாதானமும் முரண்பாடுகளும் கற்கை நெறியினை தொடர்ந்த தமக்கு இழைக்கப்படும் அநீதி தொடர்பில் எவரும் கவனம் செலுத்தாமை கவலையளிப்பதாக களனி பல்கலைக்கழகத்தின் சமாதானமும் முரண்பாடுகளுக்குமான பாடநெறி மாணவர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்ப்பில் கடந்த ஆண்டு இப்பாடநெறியை பூர்த்தி செய்து வெளியேறிய மாணவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
உயர்தரப் பரீட்சையில் அகில இலங்கை ரீதியான வெட்டுப்புள்ளி போடப்பட்டு 35 மாணவர்கள் சமாதானமும் முரண்பாடுகளும் பாடநெறிக்காக களனி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்படுகின்றனர்.
இங்கு ஆங்கில மொழி மூலம் பாடநெறி இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும் சிங்கள மொழியிலேயே பாட நெறிகள் நடத்தப்படுகின்றது.
இந்நிலையில் நாம் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் கல்வியை நிறைவு செய்து பெறுபேறுக்காக காத்திருந்த சமயம் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களுடைய பெறுபேறுகள் வெளியிடப்படாமல் சிங்கள மாணவர்களது பெறுபேறுகள் மாத்திரம் வெளியிடப்பட்டிருந்ததுடன் அவர்களுக்கு மாத்திரம் பட்டமளிப்பு விழாவும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் இது தொடர்பில் நாம் நிர்வாகத்துடன் வினவிய நிலையிலும் எவ்வித பலனும் கிடைக்காது போனதுடன் பட்டமளிப்பு விழா நிறைவு பெற்றவுடனேயே எமது பெறுபேறுகள் வெளியிடப்பட்டிருந்தது.
இதன் காரணமாக எமது கல்வியாண்டு ஒரு வருடங்களுக்கு பின் தள்ளப்பட்டுள்ளதுடன் ஒரு வருட காலம் வீணடிக்கப்பட்டுமுள்ளது. இது தொடர்பில் நாம் பாராளுமன்ற உறுப்பினர்களிடமும் முறையிட்ட போதிலும் எவ்வித பலனும் கிட்டவில்லை என தெரிவித்தனர். vi

Post a Comment