Header Ads



நியூசிலாந்தில் வாழும் இலங்கை முஸ்லிம்களின் பெருநாள் ஒன்றுகூடல் (படங்கள்)


இலங்கையில் சுனாமி அனர்த்தம் நிகழ்ந்ததை தொடர்ந்து தாய் நாட்டில் உள்ள மக்களுக்கு உதவும் நல்ல நோக்கில் நியூசிலாந்து வாழ் இலங்கை இஸ்லாமிய சகோதரர்களால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பான Sri Lankan Society of NZ இன் ஏற்பாட்டில் நியூசிலாந்து வாழ் இஸ்லாமியர்களுக்கான பெருநாள் ஒன்றுகூடல் ஆக்லாந்து மௌன்ட் ரொஸ்கில் அரங்கில் (10 - 08 -2013 ) சனிக்கிழமை இரவு சிறப்புர நடைபெற்றது.

சிறுவன் ஸமீர் ஹுசைனின் கிரா - அத்துடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் சிறார்களது பல கலை, கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றது. நியூசிலாந்தில் பிறந்த குழந்தைகளுக்கு தாய் நாட்டின் பெருமையையும், இலங்கை நாட்டைப்பற்றியும்  சொல்லிக்கொடுக்கும் விதமாகவும் அரங்கேற்றப்பட்ட உரைச்சித்திர வடிவிலான நாடகமானது அனைவரது கவனத்தையும் கவர்ந்ததுடன் பாராட்டுக்களையும் பெற்றது. 

மன்றத்தின் சமகால தலைவர் அசாபர் இஸ்மத் செயலாளர் நைரூஸ் பாவா பொருளாலர் அரபாத் காசிம் மற்றும் மன்ற அங்கத்தவர்களது அயராத முயற்சியால் சிறப்புர ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஒன்றுகூடல் நிகழ்வில் இரு பாலாருக்கும் பிரத்தியேகமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததுடன் வயது வந்தவர்களுக்கான சுவாரஷ்யமான பல போட்டிகளும் கலாச்சார நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இலங்கை இஸ்லாமிய மக்களுக்கிடையிலான மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சிகளையும், சமூக ஒன்றுகூடல்களையும், கடந்த பல வருடங்களாக ஏற்பாடு செய்துவரும் இனால் நியூசிலாந்து வாழ் இலங்கை இஸ்லாமிய சொந்தங்களுக்காக விசேட ஜனாஸா ஏற்பாடுகளும் செய்து தரப்படுகின்றது.


No comments

Powered by Blogger.