மனந்திறக்குமாறு ஜனாதிபதி கூறியபோது, குட்டிப் சலுகைகளை அடுக்கிய முஸ்லிம் உறுப்பினர்கள்
கிழக்கு மாகாண சபை எதிர்கொள்ளும் நெருக்கடிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் முக்கிய பேச்சுவார்த்தையொன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்றுள்ளது. இதில் கிழக்கு மாகாண சபையின் ஆளும்கட்சி உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர், மாகாண ஆளுநர், முஸ்லிம் அமைச்சர்கள் என பலர் கலந்துகொண்டுள்ளனர்.
இதன்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களை நோக்கி, மனந்திறந்து பேசுங்கள் என பகிரங்கமாக குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி இப்படிக் கூறியவுடன், கிழக்கு மாகாண சபை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரோ சலுகைகள் குறித்து பேசியுள்ளனர். சிலர் தமக்கான அலவன்ஸ், வாகனம் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாகாண நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு செய்வதாக முன்னர் அடிக்கடி கருத்து வெளிட்டுவந்த எந்தவொரு கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஜனாதிபதி முன் கிழக்கு மாகாண ஆளுநருக்கு எதிராக மூச்சு விடவில்லையாம். பலர் சலுகைகள் குறித்து பேசினார்களே தவிர குறிப்பிட்டு கூறும்படியான மக்கள் பிரச்சினைகள் பற்றி கருத்துக்களை முன்வைக்கவேயில்லையாம்.
அதேநேரம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, கிழக்கு மாகாண சபை ஆளும்கட்சி உறுப்பினர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென அறிவுறுத்தி குறித்த கூட்டத்தை நிறைவு செய்துள்ளார். இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் மூலம் இந்த தகவல்கள் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கிடைக்கப்பெற்றன.

இதுதான் எமது முஸ்லீம் பிரதிநிதிகள் ஹெஹெஹெஹெஹெஹெஹெஹெஹெஹெஹீ
ReplyDeleteThis is the beauty of our politicians.
ReplyDeleteechil nayhal
ReplyDeleteகேணப் பசங்க
ReplyDelete“And it is all the same for them whether you warn them or do not warn them - they will not believe”
ReplyDeleteThese are the politicians. They will balk outside in front of the people until they full fill their needs. After they will not remember how they came to the house and who supported them. Please do not trust the politician who is building for him house while the poor nation hasn’t a hut to live.
தான் பதவிக்கு எதற்காக அமர்த்தப்படுகின்றேன் என்பதுகூடப்புரியாத அரைவேக்காடுகள் பதவிக்கு அமர்த்தப்பட்டால் சரியான சந்தர்ப்பங்களை அவர்களுக்கு வாசியாகவே பார்க்கக்கூடிய மட்டுப்படுத்தப்பட்ட உணர்வுடையவர்கள்தான் இவர்கள் இவர்களை நம்பி நாம் ஒரு காரியத்திலும் இறங்க முடியாது. இதில் நாம் செய்யவேண்டியது என்னவென்றால் யார் பதவியில் இருக்கும் காலம் மக்களுக்கு நேர்மையாக செய்கின்றார்களோ அவர்களைத்தான் மீண்டும் தெரிவு செய்யவேண்டும், இதுபோன்ற சாக்கடைகளை மறுமுறை ஒரு வாக்கும் இடாமல் வீட்டுக்கு அனுப்பவேண்டும். இதில் உறுதியாக இருந்தவர்கள்தான் தமது தேவைகளை ஓரளவு நிறைவேற்றியுள்ளார்கள்....
ReplyDeleteEppothu marum imm mana Avalumurum Amaichchu samooham
ReplyDelete