Header Ads



இனவாத அரசியல் அபாயகரமானது - ஜனாதிபதி மஹிந்த

இனவாத அரசியல் அபாயகரமானது. இந்த நாட்டுக்கு குறுகிய அரசியல் போக்கு தேவையில்லை. தவறான பிரசாரங்களை நம்ப வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் அழிந்துவிடாத வகையில்  நீங்கள் தீர்மானம் எடுப்பீர்கள் என நான் நம்புகிறேன்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்

கிளிநொச்சிக்கு 15-06-2013 விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில்,

“திட்டமிட்டபடி வடமாகாணசபைத் தேர்தல் நடைபெறும். வடபகுதி மக்களுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யும் சுதந்திரம் உண்டு. நீங்கள் தெரிவுசெய்யும் அவர்கள் இப் பிராந்தியத்தை மேலும் அபிவிருத்தி செய்வார்கள். கடந்த 30 ஆண்டுகளில் அழிக்கபட்டவற்றை நாம் மீளப் பெற்றுக்கொண்டு வருகிறோம். அவற்றை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். யுத்தம் 30 ஆண்டுகள் நடைபெற்றது, ஆனால் அபிவிருத்தி நான்கு ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. வித்தியாசத்தை நீங்களே பாருங்கள். உங்கள் பிராந்தியம் துரிதமாக அபிவிருத்தியடைகிறது. அது மேலும் அபிவிருத்தியடைய வேண்டும்.

இனவாத அரசியல் அபாயகரமானது. இந்த நாட்டுக்கு குறுகிய அரசியல் போக்கு தேவையில்லை. தவறான பிரசாரங்களை நம்ப வேண்டாம். உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் அழிந்துவிடாத வகையில்  நீங்கள் தீர்மானம் எடுப்பீர்கள் என நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார் ஜனாதிபதி. 

கடந்த 30 ஆண்டுகளில் அழிக்கபட்டவற்றை நாம் மீளப் பெற்றுக்கொண்டு வருகிறோம். அவற்றை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். யுத்தம் 30 ஆண்டுகள் நடைபெற்றது, ஆனால் அபிவிருத்தி நான்கு ஆண்டுகளில் நடைபெற்றுள்ளது. வித்தியாசத்தை நீங்களே பாருங்கள். உங்கள் பிராந்தியம் துரிதமாக அபிவிருத்தியடைகிறது. அது மேலும் அபிவிருத்தியடைய வேண்டும்” என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

“கடந்த நான்கு ஆண்டுகளில் இப்பிராந்தியம் வீடமைப்பு, பாதை அபிவிருத்தி, மின்சக்தி, கல்வி, சுகாதாரம், வர்த்தகம், வங்கியலுவல்கள் உள்ளிட்ட பல் துறைகளில் புதிய வசதியை பெற்றுள்ளது. மேலும் பல வசதிகளை இப்பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பெற்றுக் கொடுப்போம்” எனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் உறுதியளித்தார். tm

5 comments:

  1. இதையே ஜனாதிபதி அம்பாந்தோட்டையிலும், மாத்தறையிலும் பேசினால் நன்றாக இருக்கும்.

    -புவி றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-

    ReplyDelete
  2. இல்லை இல்லை இந்த அரசாங்கம் இனி எமக்கு வேண்டாம் என்பதில் நாம் உறுதியாக் இருக்கவேண்டும், முன்பைய தேர்தல் காலங்களின் இதேபோன்றுதான் இவர் சொன்னார் தேர்தல் முடிந்ததும் வழமையானதுதான் இவ்வளவு நடந்ததே இவர் ஏதாவது தட்டிக்கேட்டாரா? இவர் சகோதர் எவ்வளவெல்லாம் ஆட்டம் போடுகின்றார் ஏன் இவர் பேசவில்லை, இனிமேல் இந்த அரசாங்கத்தை ஆதரித்து நாம் இன்னும் இன்னும் நம் சந்ததிகளை படுபாதாளத்திற்குள் தள்ளவேண்டாம். நடந்தவைகளை மறந்துவிடக்கூடாது. இனிமேல் நாம் இந்த அரசாங்கத்திற்கு வாக்குகள் இடக்கூடாது எதிர்வரும் மாகணசபைத்தேர்தலிலே இருந்து இவர்களை எதிர்க ஆரம்பிப்போம், இந்த அரக்கர்களின் ஆட்சிக்கு முடிவு கட்டுவோம் இதில் நாம் அனைவரும் இன்றும் நாளையும் மாறாத மனதுடன் செயல்படுவோம்.. ஞாபகம் வைத்திருப்போம்...

    “வேண்டாம் நமக்கினி இதுபோன்றதொரு அரக்கரகளின் ஆட்சி”

    ReplyDelete
  3. A Muhmeen will not fall into the same pit second time.

    Means ONE lesson is enough to decide and not get fooled again

    ReplyDelete
  4. Well Said Mr. Renees. It's is very important advise for all minor communities in SLK

    ReplyDelete
  5. ஒரு நிலைக்கண்ணாடி முன்னே நின்று கூறவேண்டிய கூற்று!

    ReplyDelete

Powered by Blogger.