Header Ads



தமிழ் பேசும் கல்வி நலனில் அசமந்தப் போக்கு - இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம்

கல்வி அமைச்சில் தமிழ் மொழி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையினால் தமிழ் பேசும் கல்வித்துறைசார்ந்தவர்களின் நலன்களில் அசமந்தப் போக்கு காணப்படுவதாக இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் தவைர் எம். அனஸ் குறிப்பிட்டதாவது,

இலங்கையின் பிரதான அமைச்சுக்களுள் கல்வி அமைச்சும் ஒன்றாகும். இங்கு சுமார் 1200க்கும் அதிகமான உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் பணியாற்றுகின்;றபோதி லும், தமிழ் மொழி மூலமானவர்கள் ஐம்பதுக்கும் குறைவானவர்களோ சேவைக் கமர்த்தப்பட்டுள்ளனர். 

இங்கு போதியளவில் தமிழ்மொழி மூல உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் இன்மை யால் அமைச்சின் தேவையை நாடும் தமிழ் மொழி மூல அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எண்ணற்ற இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இது தொடர் பில் சங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு வந்துள்ளனர்.

நாட்டிலுள்ள 342 தேசிய பாடசாலைகள் உட்பட மொத்தமுள்ள 9,731 பாடசாலை களிலும் 6,312 தனி சிங்கள மொழிப் பாடசாலைகளும், 2,808 தமிழ் மொழி மூலப் பாடசாலைகளும், சிங்கள மற்றும் ஆங்கில மொழிப் பாடசாலைகள் 371ம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசாலைகள் 138ம், தமிழ் மற்றும் சிங்களப் மொழி மூலப் பாடசாலைகள் 60ம், சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பாடசா  லைகள் 42ம் காணப்படுகின்றன.

அவ்வாறே, இப்பாடசாலைகளில் 74 வீதமான 29 இலட்சத்து 44 ஆயிரத்து 774 சிங் கள மொழி மூல மாணவர்களும், 26 வீதமான 10 இலட்சத்து 29 ஆயிரத்து 73 தமிழ் மொழி மூல மாணவர்களும் கல்வி பயிலுகின்றனர்.

இப்பாடசாலைகளிலுள்ள இம்மாணவர்களுக்கு கல்வி புகட்ட, 164,035 சிங்களமொழி மூல ஆசிரியர்களும், 52,998 தமிழ்மொழி மூல ஆசிரியர்களும், 2,853 ஆங்கில மொழி மூல ஆசிரியர்களும் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.

இத்தொகையினருக்கான தமிழ்மொழி அமுலாக்கம் தொடர்பில்,அரசியல் யாப்பிலும், அரசகரும மொழி அமுலாக்கல் அமைச்சிலும் எழுத்திலும், சொல்லிலும் என்னதான் சொல்லப்பட்டாலும், செயற்படுத்துபவரின் எண்ணத்தில் வராதவரை செயலில் எது வும் வராது என்பது மட்டுமே உண்மை.

நாட்டில் போதனா மொழி ஊடாக இலவசக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்ட காலம் முதல் கல்வியில் சமத்துவம், சமவாய்ப்பு, சம அந்தஸ்து என்றெல்லாம் சொல்லப் பட்டு வந்தாலும், ஏட்டில் இருந்தாலும், அந்த இலவசக் கல்வியை அமுல்படுத்தும் தலைமை அமைச்சிலேயே தமிழுக்குப் போதிய இடமில்லை என்றால் வேறு எங்கு அதன் அமுலாக்கத்தைக் காணமுடியும். 

நிரல் கல்வி அமைச்சில் தமிழ் மொழிக்குப் போதிய ஆளணியோ, அமுலாக்கமோ இல்லாமை காரணமாக அண்மையில் தேசிய பாடசாலையில் இருந்து மாகாணப் பாடசாலைக்கு விடுவிப்புகோரிய அதிபர் ஒருவருக்கு, முதலில் மற்றுமொரு தேசிய பாடசாலைக்கும்,பின்னர் மற்றுமொரு மாகாணத்திற்கும் விடுவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

 இந்நிலைமை மேலும் தொடராமலிருக்க, துரிதகெதியில் தமிழ் மொழியில் பணி யாற்றக் கூடியவர்களைப் போதியளவில் நியமித்து, தமிழ் மொழிக்கும் சமஅந்தஸ்து கிடைத்து, தமிழ் மொழி மூலமானவர்களும் கல்வி அமைச்சின் நன்மைகளைத்  திருப்திகரமாகப் பெற்றுக் கொள்ள உதவுமாறு சங்கம் கோரிக்கை விடுக்கின்றது.  

1 comment:

  1. வணக்கம்

    கடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
    நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது

    ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.

    இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.

    நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.

    இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.

    திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.

    உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.

    அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.

    லிங்க்ஐ படியுங்க.

    http://tamil.vallalyaar.com/?page_id=80


    blogs

    sagakalvi.blogspot.com
    kanmanimaalai.blogspot.in

    ReplyDelete

Powered by Blogger.