Header Ads



கிழக்கு மாகாண சபையில் அக்கரைப்பற்று கல்வி வலயம் தொடர்பில் பிரேரணை

(எஸ்.அன்சப் இலாஹி)

நாளை 18ம் திகதி (18.06.2013) செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ள கிழக்கு மாகாணசபையின் சபை அமர்வில் தனிநபர் பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகள் காணப்படுகின்றன. குறிப்பாக தகுதி வாய்ந்த அதிபர்கள், இலங்கை அதிபர் சேவை பரீட்சையில் சித்தியடைந்துள்ள அதிபர்களை இதுவரை பாடசாலைகளுக்கு நியமிக்காமை, ஆசிரியர் இடமாற்றம், பிந்தங்கிய பாடசாலைகளுக்கு வளங்களை பங்கீடு செய்யாமல் நகர்ப்புற பாடசாலைகளுக்கு மட்டும் அதிகமா பங்கீடு செய்தல், பொத்துவில் பிரதேசத்தில் உள்ள ஆசிரியர் சமமின்மையில் செய்வதில் காட்டப்படுகின்ற அக்கறையின்மை போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாணசபையின் சபை அமர்வில் தனிநபர் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் மிக நீண்ட காலமாக நிலவும் அதிபர் பற்றாக்குறையை, அதிபர் பரீட்சையில் சித்தியடைந்த அதிபர்களைக் கொண்டு நிவர்த்தி செய்யுமாறு உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள்விடுத்தும்; இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்காமல் செயற்பட்டு வருகின்றமை அதேபோன்று இவ் வலயத்தில் உள்ள ஆசிரியர் இடமாற்றம் என்பனவும் மிக முக்கியமாக பேசப்படவுள்ளதாகவும் அவர் மேலும்; தெரிவித்தார். கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற சபை அமர்வில் இப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட இருந்த நிலையில் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

1 comment:

  1. " ஒரே பாடசாலையில் 20 வருடங்களுக்கு மேலாக கற்பிக்கும் ஆசிரியர்கள் 3100 பேரும் 10 வருடங்களுக்கு மேலாக கற்பிக்கும் ஆசிரியர்கள் 9300 பேரும் இருக்கின்றனர் அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு நிச்சயமாக இடமாற்றம் வழங்கப்படும் " - கல்வியமைச்சர் பந்துல குணவர்தன.

    " கிணற்றுத் தவளைகள் ஆற்றுத்தவளைகளாக மாற்றப்படுவது வரவேற்கத்தக்கது."
    இலங்கை பாடசாலையில் காணக்கூடிய ஒர் விடயம் யாதெனில்,
    " சிலர் ஒரு பாடசாலையில் கற்று அப்பாடசாலையில் ஆசிரியராக நியமணம் பெற்று அப்பாடசாலையில் தொடர்ச்சியாக இருந்து அங்கிருந்து ஓய்வுபெற்று சென்றவர்கள் உள்ளனர், செல்லவிருப்பவர்களும் உள்ளனர். " இவர்கள் எத்தனைபேர் என்று கணக்கெடுக்கவும் முடியும். எனவே இவர்களை " கிணற்றுத் தவளைகள் " என்பதில் தவறில்லை என நினைக்கின்றேன்.

    10, 20 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் மட்டுமன்றி ஒரு கல்விக்கோட்டத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக இடமாற்றம் வழங்கப்படல் வேண்டும்.
    இதில் அரசியல் வாதிகள் தலையிட்டு ஒருசிலரது இடமாற்றத்தை தடுத்தால் அது அநீதியாகும். இவ்வநீதிகள் நாட்டுக்கும், கல்விதுறைக்கும், அவ்வூருக்கும் சாபத்தை ஏற்படுதும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனனில்,

    சில ஆசிரியர்கள் மிக நீண்டகாலமக அவர்களது சொந்த ஊரிலுள்ள பாடசாலைக்கு வரமுடியாமல் தூரப்பிரதேசத்தில் அதாவது, வெளியூரில், வெளிக்கல்விவலயத்தில், வெளிக்கல்விமாவட்டத்தில், மாகாணங்களில் கடமையாற்றுகின்றனர் அதற்கு காரணம் குறித்த சில பாடத்திற்கான ஆசிரியர்கள் அவர்களது ஊரிலுள்ள பாடசாலையில் தொடர்ச்சியாக 08, 10 வருடங்களுக்கு மேலாக இருப்பதனாலாகும்.
    எனவே, வெளியூரில், வெளிமாவட்டத்தில், வெளிமாகாணதில் சேவையாற்றும் ஆசிரியர்கள் அவர்களது சொந்த ஊரிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு இந்த இடமாற்றம் ஒர் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.