Header Ads



சவூதி வழங்கிய பணத்தை ரிசானா குடும்பத்தினர் ஏற்காவிடில் திருப்பியனுப்பப்படும் - ஹிஸ்புல்லா


(Vi) சவூதி அரேபிய பிரமுகர் வழங்கியுள்ள பத்து இலட்ச ரூபா பணத்தை ரிசானா நபீக்கின் குடும்பத்தினர் ஏற்றுக் கொள்ள மறுத்தால் அப் பணம் திருப்பி அனுப்பப்படும் என்று பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இலங்கைக்கு கடந்தவாரம் விஜயம் செய்த சவூதி அரேபிய இளவரசரின் சட்ட ஆலோசகர், இலங்கை ஊடகங்களில் ரிசானா நபீக்கின் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் இலங்கை மக்களின் உள்ளக் கிடக்கைகளை அறிந்து தனது சொந்த பணத்தில் 10 இலட்சம் ரூபாவை ஹிஸ்புல்லாஹ்விடம்  வழங்கினார்.

இந்நிலையில் சவூதி அரேபிய அரசு வழங்கும் பணத்தை பெற்றுக்கொள்ள போவதில்லை என்று ரிசானாவின் தாயார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.



5 comments:

  1. Late Rizana Rafeek family should take it the gift,that great things and their should show them they not take revenge.Also one thing remember majority of saudians standed Rizana nafeek side and untill last moments all are wished to give the pardon but that baby family didn´t give pardon unfortunity.
    May allah give jannah this Rizana nafeek ameen ameen!

    ReplyDelete
  2. முதலாவது அவர் முயற்சி செய்திருக்கணும், சவுதி பிரதி நிதி சவுதில இருந்து வந்து குடுத்திட்டார் இவருக்கு கொழும்பு ல இருந்து மூதூருக்கு போக இனித்தான் விசா அனுமதி பெறணுமொ

    ReplyDelete
  3. இங்க போட்டிருக்கின்ற போட்டோவே ஆயிரம் கதை சொல்லுதே! அதுல ஒன்டு - நீங்க காச திரும்ப குடுப்பயளா இல்லையா என்பதும். ஜமாய்ங்க மினிஸ்டர்!!

    ReplyDelete
  4. ஹிஸ்புல்லாஹ் போன்ற சந்தர்ப்பவாத குட்டி பூர்ஷ்வா அரசியல்வாதிகளுக்கு ஏழைகளின் கண்ணீரும் புரியாது ரோஷமும் தெரியாது.

    இவர்களைப்போல அதிகார மையங்களுக்கு அடிவருடிகளாய் செயல்படும் கேடுகெட்ட செயல்களை ஏதோ ராஜதந்திரம்போல காட்டிக்கொண்டு திரிபவர்களுக்கு ஏழைகளாக இருந்தாலும் மானமுள்ளவர்கள் குடிசையில் சீவித்தாலும் குணத்தில் குன்றென நிமிர்ந்து நிற்பவர்கள் நாங்கள் என்று நிரூபித்த அந்த ஏழைத்தாயின் மறுப்பு நல்ல செருப்படி!

    ReplyDelete
  5. இழப்பில் வலியும் அதிகம் ,
    எதிர்க்கும் வலிமையும் அதிகம் .
    Honesty is a very Expensive Gift. Do not Expect it from cheap people.

    ReplyDelete

Powered by Blogger.