Header Ads



எங்கள் குடியிருப்புக்கு தீ வைத்தது கடற்படையே - மீள்குடியேறிய முஸ்லிம்கள் வேதனை

 
 
இர்ஷாத் றஹ்மத்துல்லா
 
மன்னார் மறிச்சுக்கட்சி பிரதேசத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை தற்போது தனிந்துள்ளதாகவும்,அங்கு பாதுகாப்பு கடமையில் பொலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
நேற்று இரவு இடம் பெற்ற தீ வைப்பு சம்பவம் ஒன்றினையடுத்து அப்பகுதியில் மீள்குடியேறிய முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.சம்பவம் இடம் பெற்றதையடுத்து,மக்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த உரயி நடவடிக்கையினை எடுக்குமாறு அமைச்சர் றிசாத் பதியுதீன்,மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் பாதுகாப்பு தரப்பினருடன் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியதையடுத்து இன்று மறிச்சுக்கட்டி பிரதேசத்தில் 50 பேரடங்கிய மன்னார்,வவுனியா பொலீஸ் நிலையங்களைச் சேர்ந்த பொலீஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 
அதே வேளை இந்த தீ வைப்பு சம்பவத்துடன் முல்லிக்குளம் கடற்படையினர் தொடர்புபட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள் பொலிஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.சுமார் 50 பேர் வரையில் இன்று பொலீஸாரிடம் தமது வாக்கு மூலங்களை கொடுத்ததாக பிரதேச வாசியொருவர் தெரிவித்தார்.
 
பிரதேசத்திற்கு  பொறுப்பான கிராம அதிகாரியின் உதவியுடன்,பொலீஸார்  சேத விபரங்களை பெற்றுக் கொண்டுள்ளனர்.அதே வேளை தீ சம்பவத்தால் தமது குடிசைகளை  இழந்துள்ள  குடும்பங்களின் விபரங்களை  மன்னார் அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரி பெற்றுள்ளதாக முசலி பிரதேச செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
 
இதே வேளை நாளை காலை பாதிப்புக்குள்ளான மக்களுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதற்கு வன்னி பிராந்திய இரானுவ கட்டளை அதிகாரி வருகைத் தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்த நிலையில் இன்று வழமை போன்று போக்குவரத்து சேவைகள் இடம் பெற்றதாகவும்,புத்தளம் -மன்னாருக்கான பயணிகள் பேரூந்து சேவைகளில் எவ்வித தடங்களும் ஏற்பட்டிருக்கவில்லையென்று பயணிக்ள சிலர் தெரிவித்துள்ளனர்.
 
 

2 comments:

  1. ஆயர் - பொட்டு அம்மானாக, ஜூட்சன் - கரிகாலனாக மாறிய கொடூரம் போதாது என்று, இப்பொழுது கடற்படையினர் தம் பங்கிற்கு கடற்புலிகளாக மாறி மன்னர் முஸ்லிம்களை வதைக்கின்றனர். இது ஒரு தனிச் சம்பவமா, அல்லது திட்டமிட்ட சம்பவ தொடர்களின் ஆரம்பமா என்பதனை அல்லாஹ்தான் அறிவான்.

    ReplyDelete
  2. நாடளாவிய ரீதியில் எமது எதிர்ப்பை, பலத்தை காட்டினால் என்ன? உலமா சபை விழிக்குமா?

    ReplyDelete

Powered by Blogger.