இதே நிலைமை JVP எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏற்பட்டிருந்தால்..?


சமையல் எரிவாயு தட்டுப்பாட்டால் பல குடும்பங்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக ஹர்ஷ டி சில்வா Mp தெரிவித்துள்ளார்.



அனைவராலும் PickMe Food, Uber Eats போன்ற உணவு விநியோக சேவைகளைப் பயன்படுத்த முடியாது, பல குடும்பங்கள் 3 வேளை உணவைக்கூட சிரமத்துடன் பெற்றுக்கொள்ளும் நிலையில், வீட்டில் சமைப்பதற்கான எரிவாயுவும் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.


குறிப்பாக, லாப்ஸ் எரிவாயு சிலிண்டர்கள் தொடர்ந்து கிடைக்காமை குறித்து அரசாங்கம் உரிய தீர்வை வழங்கத் தவறியுள்ளது. கோதுமை மா, பாண், எரிபொருள் விலைகள் அதிகரித்து, குடும்பங்களின் பொருளாதாரச் சுமையை மேலும் அதிகரித்துள்ளது


இதே நிலைமை எதிர்க்கட்சியாக இருந்தபோது ஏற்பட்டிருந்தால் JVP போராட்டங்களை முன்னெடுத்திருக்கும் என்றும் விமர்சித்த ஹர்ஷ டி சில்வா, எரிவாயு விநியோகப் பிரச்சினைக்கு அரசாங்கமும் பொறுப்பான அமைச்சரும் உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.