தாய்லாந்து பிரதிப் பிரதமர், ஜனாதிபதி சந்திப்பு
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தாய்லாந்து பிரதிப் பிரதமரும் வெளிவிவகார அமைச்சருமான சிஹாசக் புவாங்கெட்கியோவ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்தார்.
கண்டி அஸ்கிரி மகா விகாரையில் நடைபெறும் அரச கடின சீவர பூஜை புண்ணிய உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக தாய்லாந்து மன்னர் மகா வஜிரலோங்கோர்னின் அரச பிரதிநிதியாக சிஹாசக் புவாங்கெட்கியோவ் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் நிலவும் நீண்டகால கலாசார மற்றும் மத ரீதியான உறவுகளை நினைவுகூர்ந்தவாறு ஜனாதிபதியும் தாய்லாந்து பிரதிப் பிரதமரும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.

Post a Comment